பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

காலத்தில் பேரன்பு செய்தார். இப்போது கள்வர் போலக் கொடியவராய் உள்ளார் நீலமணி போல வீழும் அருவி யுடைய தலையில் பொன் போல வேங்கை மலர் பரவிக் கிடக்கும் உயர்ந்த மலைத் தொடர்ச்சியில் ஆடும் மூங்கில் வானில் ஒடும் முகிலைக் கிழிக்கும் கொடு முடியால் உயர்ந்த மலைக்கு உரிமையுடைய, மலை கிழவோனே அக் கொடி யவர் ஆவார்.” என்று பிரிவாற்றாத தலைவிக்குத் தோழி ஆற்றுவித்து உரைத்தாள்

203. எவ்வகையில் செல்கின்றாளோ? நின்ற வேனில் உலந்த காந்தள் அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது, ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென, மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய, புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி யாங்கு வல்லுநள்கொல்தானே - யான் தன் வணைந்து ஏந்து இள முலை நோவகொல், என நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ வெய்ய உயிர்க்கும் சாயல், மை ஈர் ஒதி பெரு மடத்தகையே? - பூதனார் நற் 29 “நிலைத்த வேனிற் காலத்தில், வாடிய காந்தளுடைய, அழல் வீசும் நீண்ட வழியில், நிழலிருக்குமிடம் கிடைக் காமல் குட்டிகள் ஈன்று அவற்றோடு கிடந்த பெண் புலி மிகவும் பசித்ததென்று மயங்கின மால்ை.வேளையில் வழிப் போவாரைக் கொல்லும் பொருட்டு ஆண் புலி வழியைப் பார்த்துத் தங்கியிருக்கும் புல்லிய வழியாகிய சிறிய பாதை யில் எப்படி அவள் போக முடிந்தவளாய் இருப்பாளோ? அவள் யாரெனில் என் மகள். அழகிய நிமிர்ந்த இளைய கொங்கை வருந்துமோ என்று நினைத்து யான் படுக்கையில் அணைத்திருந்த கை நெகிழ்ந்துவிட்ட அதற்கே அவள் தனது பெரிய அமர்ந்த குளிர்ந்த கண்கள் நீர் வடிய அழுது வெய்ய பெருமூச்சு விடுவாள்; அவள் மென்மையோடு கரிய கூந்தலையும் பெரிய மடப்பத்தையுமுடைய தகுதி