பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

205. என் பொறுப்பன்று இது பிணங்குஅரில் வாடிய பழ விறல் நனந் தலை, உணங்குஊண் ஆயத்து ஒர் ஆன் தெள் மணி பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று இவளொடும் செலினோ நன்றே குவளை நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, கலை ஒழி பிணையின் கலங்கி மாறி அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் ஆகுவது அன்று அவள் அவலம் - நாகத்து அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, ஆர்கலி நல் ஏறு திரிதரும் கார் செய் மாலை வரூஉம் போழ்தே.- பேரிசாத்தனார் நற் 37 "செடி கொடிகள் ஒன்றோடொன்று பின்னிய சிறுகாடு வாட்டமடைந்தது. ஆனால் பழைமையான சிறப்புடையது. அகன்ற இடத்தையுடைத்து. உலர்ந்த புல் உணவு பெற்ற ஒரு கூட்டத்தில் ஒர் ஆவின் தெளிந்த மணியோசை மெல்ல ஒலிக்கும். அந்த்க் காட்டு வழியில் கூரிய பற்களையுடைய இவளோடும் செல்வீரான்ால் நன்று. அவ்வாறன்றி, நீர் அன்பில்லாது பிரிந்து செல்வீராயின், கலைமானால் ஒழிக்கப் பட்ட பெண்ம்ான் போன்று இவள் கலக்கமடைந்து நீர் சூழ்ந்த சிறந்த குவளை மலர் போன்ற இவள் கண்களிலிருந்து நீர் வடிய அழுவாள். இன்னும் கேளும், பாம்பின் அச்ச முடைய அரிய தலை துணிந்து விழும்படி சினந்து வலப் பக்கமாக எழுந்து ஆரவாரமிக்க நல்ல இடியேறு திரியும். மழை பெய்த மாலைக் காலம் வரும் பொழுது இவள் அவலம் பெரிதாகும். அப்போது இவளைக் காப்பது என் பொறுப்பு ஆகாது" என்றாள் வரைவிடை வைத்துப் பிரியும் தலைவனிடம் தோழி.

206. இந்தப் பிரிவு இனிது வாழவே பைங் கண் யானைப் பரூஉத் தாள் உதைத்த வெண் புறக் களரி விடு நீறு அடி, சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப் பாஅர் மலி சிறு கூவலின் தணியும்