பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

“வெள்ளையான ஆடையை விரித்தது போல வெயில் விளங்கும் வெப்பத்தையுடைய கோடைக் காலத்தில் உயர்ந்த குன்றத்தின் பக்கத்தில் மிக்க பசியையுடைய செந்நாய், வருந்தும் ஒருவகை மானைக்கொன்று தின்றுவிட்ட மிச்சில் தூர நாட்டிற்கு அருஞ்சுர வழியாகச் செல்வோர்க்கு உணவு ஆகும் வெப்பமுள்ள அந்த அரிய வழியைக் கடத்தல் உமக்கு உடல் பூரிக்கும் மகிழ்ச்சியாய் இருக்கிறது நீ நீங்கும் செய்தி கேள்விப்பட்ட இவளுக்கு, அஞ்சல் என்ற அரசன் கை விட்டது போலவும், பசிய கண்களையுடைய யானைப் படை வேந்தன் மதிலின் வெளியே தங்கியிருத்ததால் தன் துன்பம் நீக்குவாரைக் காணாமல் கலங்கிய உடைந்த மதிலையுடைய ஒரெயின் மன்னன் போலவும் நெஞ்சழிவு வந்தது. ஏற்றது செய்க" என்றாள் தோழி, பிரியும் தலைவனிடம்

208. விரைந்து இழிவது இள்மை வைகல்தோறும் இன்பமும் இளமையும் எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்துக்; காணிர் என்றலோ அரிதே;அது நனி பேணிர் ஆகுவீர் - ஐய! என் தோழி பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, பறை அறை கடிப்பின்,அறை அறையாத் துயல்வர, வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து, எவ்வம் மிசு-உம் அருஞ் சுரம் இறந்து, நன் வாய் அல்லா வாழ்க்கை மன்னாப் பொருட்பிணிப் பிரிதும் யாம் எனவே.

- ஆசிரியர் ? நற் 46 “நிலையற்ற பொருளைத் தேட விரும்புவீர். "யாம் பிரிதும் என்று கூறுவீர் ஆனால் உலகத்திலே எய்த அம்பு குறியில் போய்த் தைக்கும் அளவில் அதன் நிழல் எவ்வளவு விரைவில் மறையுமோ அவ்வளவு விரைவில் இன்பமும் இளமையும் கழியும் இந் நிலையாமையை அறிவீர் காக்க வேண்டியதைக் காப்பீராக ஐய, என் தோழியின் கலன் அணிந்த மார்பு வருந்த, பாணர் பறையை முழக்கும் குறுந்