பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 119

'உலர்ந்த கிளையுடைய உகாய் என்னும் மரத்தின் மிளகு கலந்தது போன்ற சுவையையுடைய புல்லிய காயை, வண்டு களை விரட்டித் தனியே உண்ட தனிமை கொண்ட நெடிய கிளையில் ஏறியிருந்து தான் உண்ட தவற்றை நினைந்து தனது புள்ளி விளங்கும் பிடரி வெறியேற்படச் சுழன்று வருந்தும் வெவ்விய புழுதியுள்ள வழியில் தான் விரும்பிய காதலைனைச் சேர்ந்து சென்றனளாயினும், பூமாலை நெருக்கி னாலும், குறிய வளையல்கள் கழன்றாலும், காஞ்சி என்னும் அணி அணிந்த அல்குலில் பொற்காசுகள் முறை வேறு பட்டாலும், மாட்சிமைப்பட்ட நலம் கைவிட்டுப் போன தென அழும் என் மாமை நிறமுடைய இளமகளின் மலர் போன்ற கண்கள் சிவந்து ஒளி குறைந்து மாறுபட்டனவோ?” என்று தலைவனுடன் சென்ற தலைவியை நினைந்து தாய் கூறினாள்

214. புறாவைக் கண்டு புலம்புகிறாள் மன்னாப் பொருட் பிணி முன்னி, இன்னதை வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்ந்து எனப் பல் மாண் இரத்திர் ஆயின், சென்ம்' என, விடுநள் ஆதலும் உரியள்; விடினே, கண்ணும் நுதலின் நீவி, முன் நின்று, பிரிதல் வல்லிரோ - ஐய! செல்வர் வகை அமர் நல் இல் அக இறை உறையும் வண்ணப் புறவின் செங்காற் சேவல் வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் நும் இலள் புலம்பக் கேட்டொறும் பொம்மல் ஒதி பெரு விதுப்புறவே?

- வண்ணப்புறக் கந்தரதனார் நற் 71 ‘ஐயனே, நிலையில்லாத பொருளைத் தேடும் கடமையை நினைந்து, வளையலையணிந்த முன் கையையுடைய உன் தோழிக்கு இதை உணர்த்துக என்று பலமுறை இரந்து கேட்கின்றீர் அவளும் செல்க என விடுதற்கும் உரியள் அப்படி விட்டால், அவள் கண்களையும் நெற்றியையும் தடவி அவள் முன்னே நின்று உம்மால் விடைபெற்றுப் பிரிய