பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

முடியுமா? முடியாதே செல்வரது பல கூறுகள் அமைந்த நல்ல இல்லின் உள்ளே வீட்டிறப்பில் வாழும் சிவந்த கால்களையுடைய அழகிய ஆண் புறா தான் விரும்பிய தன் பெண் புறாவைக் கூவி அழைக்கும் குரலைக் கேட்பாள். நீர் இல்லாமல் தனித்திருக்கும் தலைவி கையற்ற அவ் ஒலியைக் கேட்குந் தோறும் பொலிவு பெற்ற கூந்தலையுடைய அவள் பெரு நடுக்க முறுவாள்” என்று தலைவனைத் தோழி தலைவியைப் பிரிந்து செல்லற்க என்று கூறினாள்.

215. எங்ங்னம் ஆற்றுவேன்?

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன மாணா விரல வல் வாய்ப் பேஎய் மல்லல் மூதூர் மலர்ப் பலி உணிஇய, மன்றம் போழும் புன்கண் மாலை, தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் செல்ப என்ப தாமே - செவ் அரி மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும் பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என் நுதற் கவின் அழிக்கும் பசலையும், அயலோர் தூற்றும் அம்பலும், அளித்தே.

- மூலங்கீரனார் நற் 73 “வேனிற் காலத்தில் முள் முருக்கின் விளைந்த கொத்துப் போன்ற மாண்பில்லாத விரல்களையும் வலிய வாயையு முடையது பேய் அது வளப்பமான மூதூரில் தெய்வத்திற் கிட்ட மலர் தூவிய பலிச் சேற்றை உண்ணுதற்குப் பாழ் மன்றத்து அடையும் அத் துயரமிக்க மாலைக் காலத்தில், தலைவராகிய தம்மோடு இருந்தாலும் அஞ்சும் நாம் இங்கே யிருக்கத் தாம் மட்டும் பிரியப் போவதாகப் பிறர் சொல்வர் செவ்விய மெல்லிய மயிரை நிரைத்து வைத்தாற் போன்ற நீண்ட திரட்சியுடைய வளைந்த நெற்கதிர்களை யுடைய வயல்களில் அன்னம் உறங்கும் அவ்வாறு பொலிவு பெற்ற கொல்லைகளை யுடைய சாய்க்காடு என்னும் ஊர் போன்றது என் நெற்றியழகு அதனை அழிக்கும் பசலையையும் அய