பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 123

ஏகுவர் என்ப, தாமே - தம்வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோரே. - ஆசிரியர் ? நற் 84 “தம்மிடம் வந்து இரந்தவர் வறுமையை மாற்ற இயலாத இல்லற வாழ்க்கையில் வல்லமை இல்லாத, நம் தலைவர் என் கண், தோள், குளிர்ந்த நறுங்கூந்தல், தேமல் படர்ந்த அல்குல் ஆகிய இவற்றைப் பலவிதமாகப் பாராட்டி நேற்றும் இங்கே இருந்தார் அது கழிந்தது. இன்று பெரிய நீர்ப் பரப்பைப் போன்ற வெள்ளையான கானலை மரமில்லாத நீண்ட இடத்தில், மான் கூட்டம், நீர் என விரும்பிச் செல்லும் சுட்ட மண்மிடாவில் மத்தால் கடைந்த போது பிறவாத வெண்ணெய் வெப்பத்தால் சிதறியது போன்ற உவர் எழுந்த களர் நில்த்தில் ஒமை மரங்கள் நெருங்கியதுமான காட்டில் வெயில் நிலை பெற்றிருந்த வெம்மை அலைக்கும் செல்லுதற் கரிய சுரத்தில் தாமே தனியாக ஏகுவர் என்று சொல்லுவர். யான் எப்படி ஆற்றியிருப்பேன்’ என்று வருந்தினாள் தலைவி.

219. அறநெறி தவறாதவர் அறவர், வாழி - தோழி,மறவர் வேல் என விரிந்த கதுப்பின் தோல பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும் பனி அற்சிரம், நடுங்கக், காண்தகக் கை வல் வினைவன் தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகிப் பெரிய தோங்குதவி முகை அவிழ, ஈங்கை நல் தளிர்நீயவர நுடங்கும் முற்றா வேனில் முன்னி வந்தோரே! - நக்கீரர் நற் 86 "தோழி, கடும் முன்பணியையுடைய அற்சிரக் காலத்தில் மறவரின் வேற்படையின் அலை போல விரிந்த கதுப்பும் தோலுமுடைய பகடன்றையின் மலர் வட்டில்போல மலரும். அக் காலத்தில் நாம் நடுங்குமாறு தலைவர் பிரிந்தார். பின்பு. கைத் திறமையுடையவன் அழகு பொருந்தக் கற்கள் கட்டிப் பொன்பெய்து செய்த சுரிதகம் என்னும் தலையணி உருவம்