பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

போலாகிப் பெரிய கோங்குமரத்தின் குவிந்த மொட்டுகள் மலரும் அக் காலத்தில் நாம் நடுங்குமாறு தலைவர் பிரிந்தார் பின்பு, ஈங்கையின் நல்ல தளிர்கள் இனிமை தோன்ற இசையவுமான காலமாகியு இளவேனிற் காலத்து நம்மை நினைத்து நம் தலைவர் வந்துவிட்டார். அவர் அறத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்; அறவர் அவர் வாழ்க" என்று குறித்த காலத்தில் திரும்பிய தலைவனைப் பாராட்டித் தலைவி தோழியிடம் கூறினாள்

220. நினைப்பாரோ நம்மை

உள்ளார்கொல்லோ - தோழி! - துனையொடு வேனில் ஒதிப் பாடு நடை வழலை வளி மரல் நுகும்பின் வாடி, அவன வறன் பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅள் வேட்டச் சீறுர் அகன் கண் கேணிப் பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, வில் கடிந்து ஊட்டின பெயரும் கொல் களிற்று ஒருத்தல சுரன் இறந்தோரே?

- பாடினார் ? நீர் 92

"தோழி, முதுவேனிற் காலத்தில் விடாத நடையை யுடைய ஓந்தி என்னும் வழலை தன் துணையோடு வரியுடைய மரலின் மடல் விரியாத குருத்துப் போல வாடியது. அவ் இடத்தில் வறட்சியான குன்றத்து உச்சியின் பக்கத்தில் வேட்டுவச் சீறுார் உண்டு. அங்கே அகன்ற இடத்திலுள்ள கிணற்று நீரை எடுத்துப் பயன்தரும் ஆனிரை குடிக்கும்படி பத்தர் என்னும் குழியில் ஊற்றி பிற உண்ணாதவாறு ஒரு விற்பொறி வைத்து மூடி வைப்பார்- அத் தெளிந்த நீரைக் கொல்லும் ஆண் யானை பத்தரின் மேல்வைத்த விற் பொறியை எடுத்து முறித்து விட்டுப் புன்தலைப் பெண் யானையும் கன்றும் நீருண்ண ஊட்டிச் செல்லும். அச் சுரத்தின் வழிச்சென்ற நம் தலைவர் நம்மை நினையாரோ? நினைப்பர் வருந்தாதே" என்றாள் தலைவியிடம் தோழி