பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 125

221. நீ ஒன்றினைக் கூறுவாயாக ஒன்று தெரிந்து உரைத்திசின் - நெஞ்சே, புன் கால் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் விருந்தின் வெங் காட்டு வருந்ததும் யாமே, ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே.

- மருதம் இளநாகனார் நற் 103 "நெஞ்சே, புல்லிய காம்புகளையுடையதும் சிறிய இலை -களை உடையதுமான வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை முறித்துத் தள்ளி மதத்தால் செருக்கிய கடுஞ்சினமும் வலிமை யு.முடைய களிற்றியானை நின்று சென்ற நீரற்ற யானைக் காடு அது. அதில் பால் இல்லாத தோலையுடைய முலை யோடு, வயிறு நிலத்தில் பொருத்திப் பசி வருத்த முடங்கிக் கிடந்த பசிய கண்ணையுடைய பெண் செந்நாயைக் கருதி, கெடாத வேட்டைக்குப் போகிய அதன் கணவனாகிய ஆண் செந் நாயானது நடுநிலை முறையோடு நினைத்து வருந்தும் இவ்வாறான புதிய வெவ்விய காட்டில் வந்து சேர்ந்து யாம் வருந்துகிறோம். ஆள்வினை முயற்சிக்கு மேற் செல்வோம் என்றாலும் திரும்புவோம் என்றாலும் நீ துணிந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து உரைப்பாயாக." என்றான் பொருள் வயிற் பிரிந்த இடைச் சுரந்து தலைவன் தன் நெஞ்சிடம்.

222. நீடு வாழ்க!

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து ஒளிர் சினை அதிர வீசி, விளிபட வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், கடு நடை யானை கன்றொடு வருந்த,