பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண் பட்டடனை, வாழிய - நெஞ்சே குட்டுவன் குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை வண்டு படு வான் போது கமழும் அம் சில் ஒதி அரும் படர் உறவே.

- முடத்திருமாறன் நற் 105 “நெஞ்சே, குட்டுவனது குடமாலைச் சுனையிலுள்ள கரிய இதழ்களையுடைய குவளையின் வண்டுபடும் சிறந்த போதானது கமழும் அழகிய சிலவான கூந்தலையுடைய காதலி, நம்மை எண்ணி வருந்தும்படி நாம் வந்துவிட்ட பின் அவளை நினைப்பது அறமா? சாய்ந்த கொடி சுற்றிய முள்ளுள்ள இலவ மரத்தின் ஒளியுள்ள கிளைகள் அதிர்ந்து முறியுமாறு கொடுங்காற்று வீசும் மூங்கில் உள்ள பக்கத்தில் கடும் நடையுடைய யானை, கன்றுகளோடு வருந்தும்படி நீரில்லாத நிழலற்ற அரிய சுரத்திலே கவர்ந்த வழிகள் பல வற்றையும் கடந்து நெடுந்தொலைவு வந்துவிட்ட பின்பு இனிக் காதலியை நினைப்பது சரியன்று.” என்று இடைச் சுரந்து மீளலுற்ற தலைவன் தன் நெஞ்சுடன் பேசினான்.

223. எண்ணி எண்ணிச் சிரிப்பேன்! உள்ளுதொறும் நகுவேன் - தோழி! - வள் உகிர்ப் பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் கொடிறு போல் காய வால் இணர்ப் பாலைச், செல் வளி தூக்கலின்,இலை தீர் நெற்றம் கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், புல் இலை ஒமைய, புலி வழங்கு அத்தம் சென்ற காதலர்வழி வழிப்பட்ட நெஞ்சே நல்வினைப் பாற்றே; ஈண்டு ஒழிந்து, ஆனாக் கெளவை மலைந்த யானே, தோழி! நோய்ப்பாலேனே. - ஆசிரியர் ? நற் 107 "தோழியே, பெரிய நகமுடைய பெண்யானை பிளந்திட்ட நார் இல்லாத வெள்ளிய பூங்கொத்துகளையும் உடையது வெப்பாலை என்னும் மரம் அதன் அலை தீர்ந்த கிளை