பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : ...轮7

யிலுள்ள நெற்றுகள், வீசும் காற்று அசைத்தலினால், மலை யிலிருந்து வீழும் அருவியைப் போல ஒல் என ஒலிக்கும், புல்லிய இலைகளையுடைய ஓமை மரத்தை உடையதும் புலி உலவுவதுமான காட்டு வழியில் சென்ற என் காதலரிடம், அவரை வழிப்பட்டுப் பின்னே சென்ற என் நெஞ்சம் நல் வினைப் பயனை அடைந்தது அது போலில்லாமல் இங்கே தங்கி அடங்காத அலரை மேற்கொண்ட யானே, தோழி, தீவினைப் பயனை அடைந்தேன். இந்த இரண்டினையும் நினைக்குந்தோறும் யான் நகுவேன்.” என்று தலைவன் பிரிவால் வருந்தி மெலிந்த தலைவி தோழிக்கு உரைத்தாள்

224. புகல் வேறு இல்லை

'ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின் காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று, அன்னவோ, இந் நன்னுதல் நிலை? என, வினவல் ஆனாப் புனையிழை கேள், இனி உரைக்கல் ஆகா எவ்வம், இம்மென இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில், துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து, உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலை என, ஒருவேன் ஆகி உலமர, கழியும், இப் பகல்மடி பொழுதே!

- மீளுப்பெரும்பதுமனார் நற் 109 “ஒன்றுபடுவோம் என்ற பழைமைப்பட்ட காதலாலே என் காதலர் என்னைப் பிரிந்து சென்றதனால் நீ கலங்கி மயக்கமுற்று, இந் நன்னுதலாள் நிலையும் அன்னவோ என்று என்னைப் பார்த்துக் கேட்க முடியாது வருந்தும் புனையிழாய், கேள். இப்போது உரைக்க முடியாத துன்பம் ஏற்பட்டது. ஒலிக்கும் வாடை இம் என வீசும். இருள்மிக்க இராப் பொழுதில் மழைத்துளியுடைய தொழுவத்தை விட்டு வேறிடத்தில் கட்டப்பட வேண்டுமென்ற காலத்தில் அவ் வாறு செய்யாமல் கயிற்றைத் தொழுவத்தின் உச்சியிலே கட்டி விடப்பட்ட கூழை குட்டையான ஆவின் நிலை எனக்கு ஏற்பட்டது நிற்கவும் படுக்கவும் முடியாத நிலை