பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 131

228. எப்போது அது சிறப்பாகும்? பைங் காய் நல் இடம் ஒரீஇய செங் காய்க் கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கித், துணைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், இறந்து செய் பொருளும் இன்பமும் தரும் எனின், இளமையின் சிறந்த வளமையும் இல்லை; இளமை கழிந்த பின்றை, வளமை காமம் தருதலும் இன்றே அதனால், நில்லாப் பொருட் பிணிச் சேறி, வல்லே - நெஞ்சே! வாய்க்க நின் வினையே!

- ஆசிரியர் ? நற் 126 “பசிய காய் நல்ல இடத்திலிருந்து நிறம்மாறிச் செங்காய் ஆகும். பின்னர் அது கருங்களியாகிய கனியாகும் ஈத்த மரத்தில் இப்படியாகும். ஈச்ச மரமிக்க வெளிய புறத்தினை யுடைய களர் நிலத்தில் எழுந்த புழுதிபடிந்த கடுநடையுடைய ஆண் யானை மனிதரைப் பெற விரும்பி நாட்காலையில் பாலை நிலத்தில் குறுக்கிடும். அங்கு விரைவில் வரும் அய லாரைக் காணாது தன் சினத்தைப் பனை மரத்தில் மோதித் தீர்த்துக் கொள்ளும் அவ்வாறு பாழ்பட்ட நாட்டின் காடு உள்ளது. அந்தக் காட்டைக் கடந்து சென்று தேடும் பொரு ளும் இன்பம் தரும் என்றால் இளமையைக் காட்டிலும் சிறந்த செல்வம் வேறு இல்லையே. இளமை கழிந்த பின்பு செல்வமானது இன்பத்தைத் தருதலும் இல்லையே? அதனால் நெஞ்சே, நில்லாத பொருள் தேடும் ஆசை உன்னைப் பிணித்தலால் நீ செல்வாய், உன் தொழில் விரை வில் நடந்தேறுக’ என்று பொருள் தேட முனைந்த தலைவன் தன் போக்கொழித்து தன் நெஞ்சிடம் கூறினான். 229. நெஞ்சமே நீ வாழ்வாயாக தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல், தட மென் பனைத் தோள், மட நல்லோள்வயின்