பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 133

அரிசில் அம் தண் அறல் அன்ன, அவள் விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.

- சல்லியங்குமரனார் நற் 141

“நெஞ்சே, கரிய மண்சேறு படிந்த வளைந்த கன்னத்தை யும் பெரிய வாயையுமுடைய முகில் போன்ற யானையின் உடம்பு பட்டுப் பொரிந்த அடி மரத்தையும் நெரிந்த உள். தொளையுள்ள சாயையுமுடைய கொன்றை மரங்கள் நீண்ட சடையோடும் நீராடாத உடம்போடும் குன்றிலே தங்கி யிருக்கும் தவசியர் போல உள்ளன பலபடியாக உள்ள நெடிய வழியில் வெயில் பொலிவு பெறத் தோன்றும் அரிய பாலை நிலம் உனக்கு உறுதியாக எளிதாய் இருக்கலாம் ஆனால் பருந்து வட்டமிடும்படி நிமிர்ந்த கொம்பையும் உடைய யானைப் படையுடையவன் புகழை விரும்பும் கிள்ளி வளவன் அவனைச் சேர்ந்து அணிசெய்த உயர்ந்த கொடி யுடைய அம்ப்ர் நகரம். அதைக் சூழ்ந்த அரிசில் என்னும் ஆற்றின் அழகிய குளிர்ந்த கருமணல் போன்றது. இவளது விரிந்து தழைத்த கூந்தல். அக் கூந்தலின் துயிலை விட்டு அமைந்திருக்கமாட்டேன். அதனால் யான் வாரேன். நீயே சென்று வா” என்று பொருள் தேடச் செல்ல நினைத்த தலைவன் பிரிந்து செல்லாமல் ந்ெஞ்சிற்குக் கூறினான்.

231. குற்றமுடையவள் நானே! ஐதே கம்ம யானே; ஒய்யெனத் தரு மணல்ளுெமிரிய திரு நகர் முற்றத்து, ஒரை ஆயமும் நொச்சியும் காண்தொறும், நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும், கிள்ளையும், கிளை எனக் கூஉம், இளையோள் வழு இலள் அம்ம தானே, குழிஇ, அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் இன்னா இன் உரை கேட்ட சில் நாள் அறியேன் போல உயிரேன்; 'நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே.

- கண்ணகாரன் கொற்றனார் நற் 143