பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

வெஞ்சின வேந்தன் பகைகொண்டு வருத்தக் கலங்கி வாழ் வோர்கள் போய்விட்ட பெரிய ஊரை வீணாகக் காத்திருக் கும் ஒரு தனி மகன் போல என் உடம்பு இருக்கிறது” என்று தலைவன் பிரிந்த்தால் மெலிவுற்ற தலைவி சொன்னாள்

234. இணைக்குயில் அழைக்கும் துன்பம்:

இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் பெரும் பெயல் பொழிந்த நாள் அமையத்துப், பல் பொறி இரவின் செல் புறம் கடுப்ப யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில். இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக் கேட்டொறும் கலுழுமால் பெரிதே - காட்ட குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை அம் பூந் தாது உக்கு அன்ன நுண் பல் தித்தி மாஅயோளே. - இளவேட்டனார் நற் 157 “பெரிய இடமகன்ற உலகத்தில் நெருங்கிய தொழில்கள் நடக்க உதவி செய்யப் பெரிய மழை பொழிந்தது. அதன் பின்னாளில், பல புள்ளிகளையுடைய பாம்பு செல்லும் போது அதன் முதுகு நெளிவது பொல ஆற்றுநீர் தெளிவாய் ஒடும். அச் செவ்விய இளவேனில் காலத்தில், பூங்கொத்துகள் நெருங்கிய மா மரத்தில் நெருங்கியிருக்கும் குயில்கள் கூவும் தோறும் நம்மை நினைக்கும் நெஞ்கோடு, பிரிவுத் துன்பம் மிகுந்த குயில் ஒலி கேட்குந்தோறும் பெரிதும், அழுவாள். காட்டகத்தில் சிறிய மலையின் பக்கத்திலிருக்கும் நெடிய அடி மரத்தையுடைய வேங்கையின் அழகிய பூங்கொத்து உதிர்த்தாற் போன்ற நுண்ணிய பல தேமலையுடைய மாமை நிறமுடைய என் காதலி அழுவாளே." என்று பருவம் உணர்ந்த தலைவன் தன் நெஞ்சிற்குரைத்தான்.

285. கொடிய பாதை!

'மனை உறை புறவின்செங் காற் பேடைக் காமர் துணையொடு சேவல் சேரப், புலம்பின்று எழுதரு புன்கண் மலைத்