பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 137

தனியே இருத்தல் ஆற்றேன் என்று, நின் பனி வார் உண்கண் பைதல கலுழ, 'நும்மொடு வருவல் என்றி, எம்மொடுபெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் யாயொடு நனி மிக மடவை முனாஅது. வேனில் இற்றித் தோயா நெடு வீழ், வழி நார் ஊசலின் கோடை தூக்குதொறும், துஞ்சு பிடி வருடும் அத்தம் வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினைக்கே?

- ஆசிரியர் ? நற்றி 162 “பெரிய புகழையுடைய தந்தையின் நீண்ட புகழ் நிலவும் பெரிய இல்லத்தில் பெற்ற தாயோடு பிரியாது வாழும் மிக்க இளமையுடைவளே, முன்பு “மனையுறை செங்கால் புறாவின் பேடை அழகிய துணையாகி ஆண் புறாவோடு சேர அது கண்டு வருத்தம் ஏற்படும்படி தோன்றும், துன்பம் தரும் மாலைப்பொழுதில் யான் தனியே இருத்தல் ஆற்றேன்” என்று கூறி உன் நீர் வடியும் மையுண்ட கண்கள் துன்புற்றனவாய்க் கலங்க என்னைப் பார்த்து உம்மோடு வருவேன் என்று கூறுகிறாய். யான் செல்லும் வழியில் வேனிற் காலத்தில் இத்தி மரத்தின் நிலத்தைத் தீண்டாத நெடிய விழுதிலிருந்து தொங்கும் நார், ஊசல் போலக் காற்று வீசும் தோறும் அம் மரத்தின் கீழே துயிலும் பெண் யானையை வருடும் காட்டில் செல்லுதல் உனக்கு முடியுமோ? முடியாது” என்று தன்னுடன் வர எண்ணிய தலைவிக்குத் தலைவன் உரைத்தான்.

236. காலத்தில் வந்து சேர்ந்தார்! உறை துறந்து இருந்த புறவில், தனது செங் கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பக, உலகு மிக வருந்தி அயாவுறு காலைச் சென்றனர் ஆயினும் நன்று செய்தனர்' எனச் சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் - செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,