பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அஞ்சி ஒடும் அரிய காடுகள் பலவும் கடந்து பொருள் செய்யச் செல்ல எண்ணினை பாவை போன்ற நின் துணை வியைப் பிரிதல் செய்தால் அல்லது வாராதாகலான், நின் பொருள் பால் அறம் இல்லை. அவளுடன் கூடிச் செய்வதே பொருளாகலின் நீ செல்வதைக் கை விடுக” என்று தலை வனிடம் கூறினாள்

8. பிரியாதிருத்தல் நல்லது பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின் பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க் கால் எறுழ் ஒள் வீ தாஅய முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே. - ஐங் 308 தோழி, "ஐம்பாலான கரிய கூந்தலையும் மென்மையான இயல்பையும் உடைய தலைமகளைப் பிரியாது ஒழுகுவை யாயின் நன்று: பொருட்குப் பிரிவதே பொருள் எனக் கொண்டால் மலர்ந்த கொத்துகள் பொருந்திய வலிய காலை யுடைய எறுழ மரத்தின் பரந்துள்ள முருகன் விரும்பும் இப் பெரிய மலையில் இப் பருவத்தில் எங்களைவிட்டுப் பிரிக” என்று வருந்தி கூறினாள்.

9. சிறுவன் முறுவலின் இனிதோ செய்பொருள்!

வேனில் திங்கள் வெஞ் சுரம் இறந்து செலவு அயர்ந்தனையால் நீயே நன்றும் நின் நயந்துஉறைவி கடுஞ் சூல் சிறுவன் முறுவல் காண்டலின், இனிதோ - *~ இறு வரை நாட! நீ இறந்து செய்பொருளே? - ஜங் 309 தோழி பொருட்காகப் பிரியும் தலைவனை நோக்கி, "முறிந்த மலைப் பக்கத்தை உடைய நாடனே, நீ வேனிற் பருவத்தில் கொடிய பாலையைக் கடந்து பொருள் தேடப் பிரிய எண்ணினால், நீ பிரிந்து செய்யும் அந்தப் பொருள், உன்னைப் பெரிதும் விரும்பி வாழும் இவளுடைய முதற் சூலில் தோன்றிப் பிறந்த சிறுவனின் இள நகையைக் காண்ப தால் பெறக்கூடிய இன்பத்தை விடப் பெரிதாகுமோ?” என்று வினவினாள்