பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 * அன்பொடு புணர்நத ஐநதிணை - பாலை

வழியில் செல்வானானால், வேலைப் பாடுடைய தெளிந்த மணிகள் நீக்கப்பட்ட வேற்படைகள் போலப் பேய்கள் புறப்படும் பொழுது கொண்ட பாதி நாளில் ஆர்வமான நெஞ்சத்தோடு அன்பு கலந்து அவன் மார்போடு பொருந்தப் படுத்தல் விரும்பிய கண்கள் இனி எவ்வாறு துயிலும்” என வினைமேற் செல்லும் தலைவனிடம் வினவினாள் தோழி

239. அன்பில்லையேல் இன்பம் உண்டோ?

'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து, இனிது முயங்கிப், பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து உயங்கினை, மடந்தை, என்றி தோழி அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே விழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ, அன்பு இலங்கைடையே?

- ஆசிரியர் ? நற் 174 “மடந்தையே, தொகுதியையுடைய ஈந்தின் முற்றிய குலை போன்ற ஆளில்லாத வழியிலுள்ள அடிமரம் திரண்ட அழகிய பனை மரத்தின் குலைகளையுடைய நெடிய மடலில் இருந்து ஆண் பறவை குரல் மூலம் பெண்ணை அழைத்தால் பனை அடியிலிருந்த புலி எதிர்க்குரல் வழங்கும் காற்று வீசும் நெறியிலே சென்ற காதலர் மீண்டுவந்து இனிதாக முயங்கிப் பிரியாது ஒரிடத்தில் தங்கியிருந்தாலும் நீ பெரிதும் மன மழிந்து ஏன் வருந்துகின்றாய்? என்று கேட்கின்றாய் தோழி, அஃது அறியாதவர்க்கு அத் தன்மைத்தும் ஆகும் தலைவன் முன்பு பிற மாதரை விரும்பாத கொள்கையுடையவனாக இருந்தான் இப்போது விரும்பிய கொள்கையை உடைய வனாய் இருக்கிறான் வளப்பமான தன் மார்பைப் பிறர்க்கு ஊட்டுகிறான் அன்பு இல்லாதவிடத்து ஏற்படும் தழுவல் எத் தன்மையதாய் இருக்கும்” எனத் தான் மேற்கொண்ட