பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் ; 141

வினை முடித்துத் திரும்பும் தலைவன் ஒரு பரத்தையுடன் தொடர்புற்றுள்ளான் என்று கூறி வருந்தினாள் தலைவி

240. எவ்வாறு ஆற்றுவேன் யான்? பரந்து படு கூர் எரி கானம் நைப்ப, மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்; குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட வேலும் இலங்கு இலை துடைப்பப்பலகையும் பீலி சூட்டி மணி அணிபவ்வே, பண்டினும் நனி பல அளிப்ப; இனியே வந்தன்று போலும் - தோழி! - நொந்து -நொந்து, எழுது எழில் உண்கண் பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. - ஆசிரியர் ? நற் 177 "தோழி பரந்துபட்ட மிக்க தீயானது காட்டை எரித்தது மரங்கள் தீயுற்றன. கண்டோர் மகிழ்ச்சி நீங்கினர் அக் க்ாட்டு வழியில் ஒதுங்கியிருக்கவும் நிழலில்லை அக் கொடிய, பாலை நிலத்தை அவர் கடப்பார் என்பது உறுதி அவர் செயற் குறிப்பிடை, யான் அறிந்தேன் வேலின் விளங்கும். இலைப் பாகத்தை ஒழுங்குபடத் துடைப்பர் போர்ப் La கையையும் மயிலிறகு சூட்டி மணி பூட்டி அழகு செய்வர் முன்னைவிட என்னிடம் சிறப்பாக அளி செய்வர் "இணி. யான் நொந்து நொந்து அழுது, ஒவியர் எழுதத் தகுந்த எழில் கொண்ட என் மையுண்ட கண்களின் பாவையை அழிக்கும் கண்ணிர் வெள்ளத்தில் கண்களின் நீந்தும் நாளும் வந்தது போலும்” என்று தலைவன் வினைமேற் செல்லும் குறிப்ப்றிந்து தலைவி தோழிக்கு உரைத்தாள்

241. மனையறம் பூண்டு சிறப்பாளோ?

இல் எழு வயஒலருற்று ஆ தின்றெனப், பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி, அவ் வயிறு அலைந்த என் செய் வினைக் குறுமகள் மான் அமர்ப்பன்ன மையல் நோக்க்மொடு, யானும் தாயும் மடுப்பத், தேனொடு