பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் 萃 143

மணி இயல் குறுமகள் ஆடிய மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே

- ஆசிரியர் ? நற் 184 "அறிவுடையீரே யான் ஒருமகள் உடையவள் அந்த ஒரு மகளும் போர் வலிமை மிக்க கூரிய வேலை ஏந்திய காளை ஒருவனோடு பெரிய மலையிலுள்ள அரிய வழியில் நேற்றுச் சென்று விட்டாள் இனி உன் துயரத்தைப் பொறுத்துத் தாங்கிக் கொள்க’ என்று ஆறுதல் சொல்கின்றீர்கள் அது என்னால் எவ்வாறு முடியும் என் மையுண்ட கண்ணின் கருமணியில் வாழும் பாவை வெளியே வந்து தடை கற்றது போல என் அழகிய தன்மையுடைய இளமகள் விளையாடிய நீலமணி போன்ற நொச்சியையுடைய திண்ணையையும் கண்டு அவளை நினைத்தால் உள்ளம் வேகின்றதே" என்று தலைவனுடன் போகிய தலைவியை எண்ணிப் பெற்றதாய் வருந்தி உரைத்தாள்

243. பிறர்க்கென முயலும் போருள்: கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி, இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு, பெருங்கை யானை பிடி எதிர் ஒடும் கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை, வேனில் ஒதி நிறம் பெயர் முது போத்துப், பாண்யாழ் கடைய, வாங்கி பாங்கர் நெடுநிலை யாஅம் ஏறும் தொழிலபிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட் பிணிப் போகிய நாம் வெங் காதலர் சென்ற ஆறே. - ஆசிரியர் ? நற் 186

“கல்லில் உள்ள ஊற்றில் திரளும் நீரைப் பெரிய சருச் சரை யுடைய நீண்ட துதிக்கை நீட்டி ஊற்றுநிலை நீங்கும் படி வாங்கி முகந்து கொண்டு, பெரிய கையையுடைய ஆண் யானை பெண் யானையின் எதிரே ஒடும் அவ்வாறு காடு முழுவதும் வெப்பம் அடைந்த வறட்சி மிக்க மல்ை வழியில் வெனிற் காலத்தில் நிறம் மாறும் ஒதி முதுபோத்து, பாணன்