பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 .ே அனபொடு புணர்நத ஐந்திணை - பாலை

யாழ் வாசிக்க அதனைக் கேட்டுப் பக்கத்திலுள்ள நீண்டு நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையதாய் இருக்கும் தனக்கு மட்டும் என்று அல்லாது பிறர்க்கு என முயலும் பெரிய அருள் கொண்ட நெஞ்சத்தோடு விருப்பமான பொருள் முயற்சிக்கண் ாடுபடும் உள்ளப் பிணிப்பின் காரண மாகச் சென்ற நாம் விரும்பும் காதலர் சென்ற நெறியும் அதுவேயாம் அவர் விரைவில் திரும்புவார் என்பதால் யான் ஆற்றியிருப்பேன்" என்று தன் தலைவி வருந்துவாளே என்று தோழிக்குத் தலைவி உரைத்தாள்

244. கலங்காதே எதையும் எண்ணி!

தம் அல்லது இல்லா நம் நயந்து அருளி இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர், தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ் நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் கங்கை வங்கம் போகுவர்கொல்லோ - எவ் வினை செய்வர்கொல் தாமே? - வெவ் வினைக் கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய கானப் புறவின் சேவல் வாய் நூல் சிலம்பிஅம் சினை வெரூஉம், அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே?

- ஆசிரியர் நற் 189 “கொடிய தொழிலாகிய கொலைத் தொழிலில் வல்ல வேட்டுவனது வலையைக் கிழித்துக் கொண்டு ஒடிப் போன கானத்துப் புறாச்சேவல், சிலந்தி தன் வாயினாலே உண்டாக்கும் நூலால் கட்டிய பின்னலைக் கண்டு அஞ்சும் என்பதைக் கேட்டிராயோ? அசையும் காய்ந்த கிளைகளை யுடைய காட்டைக் கடந்தவர் தலைவர் அவரில்லாமல் நம் வாழ்வு இல்லை என்னும் கொள்கையுடைய நம்மை அவர் விரும்பி அருள் செய்ய இன்னும் வாரார் ஆயினும் வேறு எங்கும் போயிருக்க மாட்டார் அச்சுறுத்தும் அருங்கடவுள் முன்னர்ச் சென்று அதன் சினம் அடங்கும் பொருட்டுச் சிறிய யாழ் நரம்பின் ஒசைன்ய எழுப்பிப் பாணர் பாடினாற் போன்ற இனிய குரண்லயுடைய குருகுகள் இருக்கின்ற கங்கை