பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 147

வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் தந்தைதன் ஊர் இதுவே, ஈன்றேன். யானே; பொலிக, நும் பெயரே - கயமனார் நற் 198 "நெடுந் தொலைவிருந்து வரும் பெருவலிமை யுடையீர், யா மரம் உயர்ந்து ஒமை மரம் நிரம்பி இருக்கும் இக் காட்டு வழியில் காளை ஒருவனோடு நேற்று அப்பால் நடந்து சென்ற என் மகளை நினைத்தால் என் கண்கள் நீரில் ஆழ்ந்து விடுகின்றன இது அவள் தந்தையின் ஊரிடம், இதில் உங்களை வணங்கி வரவேற்கின்றேன் நுண்ணிய பலவாகிய பக்கமுயர்ந்த அல்குல், தோன்றி இருக்கும் ஒழுங் கோடு நேராக விளங்கும் வெண்மையான பற்கள் விளங்கிய மாலை சிலவாகிய வளையல்களையும் அடர்ந்த கூந்தலும் அவற்றை யுடையவள் என் மகள் கரிய தாடி, பிடரி, வலிய நெடிய கை, வலிய வில்லும் அம்பும் ஓயாத வள்ளண்மை யோடு கூடிய மகிழ்ச்சி இவற்றை யுடைய அவள் தந்தையின் ஊர் இதுவே யாம் அவளைப் பெற்று வளர்த்தவள் யான் அவளை நீங்கள் பார்த்து வருவீர்களானால் சொல்லுங்கள், உங்களுக்கு அறத்தோடு புகழ் உண்டாகும்” என்று தலை வனுடன் போன தலைவியின் தாய், எதிர்வரும் காதலர் இருவரைக் கண்டு மகள் பற்றி வினவினாள்

248. காணாய் உன் தந்தையின் காடு! புலி பொரச் சிவந்த புலால்அம் செங் கோட்டு ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து, வன் சுவல் பராரை முருக்கிக், கன்றொடு மடப் பிடி தழிஇய தடக்கை வேழம், தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் மா மலை விடரகம் கவைஇ, காண்வரக், கண்டிசின் வாழியோ, குறுமகள்! - நுந்தை, அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங் கொடி போலப், பல்பூங் கோங்கம் அணிந்த காடே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற் 202