பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 13

10. நெற்றி அழகு மீளாதே! பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல், இலங்கு வளை மென் தோள்,இழை நிலை நெகிழப் பிரிதல் வல்லுவை யாயின் அரிதே விடலை - இவள் ஆய்நுதற் கவினே! - ஐங் 310 தோழி தலைவனை நோக்கி, "தலைவ, பொன்னாற் செய்யப்பட்ட பசுமையான வட்டமாகச் சுற்றி, மணிகள் கோத்து அணிந்த அல்குலையும், விளங்கும் வளையலையும் மென்மையான தோளையும் உடைய இவள் அந்த அணிகள் நின்ற நிலையினின்று கழன்று நீங்க, நினது பிரிவால் இவளிடத்தினின்று நீங்கிக் கெடும் சிறு நெற்றியின் அழகு மீண்டும் பெறுதவற்கு அரிது” என்று பொருள் திரட்டப் போதல் தவிர்க்கச் சொன்னாள்

11. காலம் நீட்டிப்பரோ! வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும், ஆரிடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம் காடு இறந்தனரே காதலர்; 'நீடுவர் கொல்என நினையும், என் நெஞ்சே - ஐங் 31 தலைமகள் தோழியை நோக்கி, “காட்டில் உள்ள வேங்கை மரத்தில் ஏறிப் பூக் கொள்பவர், பஞ்சுரம் என்னும் பண் எனப் பாடுவாராயினும், அரிய வழியில் செல்பவர் அது கேட்பினும், அந்த வழியில் செல்பவர்க்கு அஞ்சும் காட்டை, நம் காதலர் முழுதும் கடந்து சென்றனர் ஆதலால் என் மனம், அவரை விரைவாக வாராமல் காலம் நீட்டிப்பாரோ என எண்ணுகின்றது” என்று ஆற்றாது கூறினாள்

12. அறம் நிறைந்து ஓங்குக! அறம் சாலியரோ அறம் சாலியரோ! வறன் உண்டாயினும், அறம் சாலியரோ வாள் வனப்புஉற்ற அருவிக் 3. கோள் வல் என்னையை மறைத்த குன்றே. - ஐங் 312