பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

"இளம்பெண்ணே, இதோ பார் இந்தக் காட்டை, இதோ பார் இந்த ஆண் யானையை, அது தன் கன்றையும் பெண் யானையையும் தழுவிக் கொண்டு செல்வதைப் பார் புலியொடு பொருத நீண்ட துதிக்கையுடையது யானை வயது முதிர்ந்தால் அதன் கொம்புகளில் முற்றிய பல முத்துகள் ஒலிக்கின்றன. வலிமை மிக்க இந்த யானை வயது மேட்டு நிலத்திலுள்ள வேங்கை மரத்தின் அடிப்பாகத்தை முறித்து தேன் உண்டாகும் தேனிக் கூட்டம் பறந்தோடிவிடச் செய்து, வேங்கை மரத்தின் பொன் போன்ற பூக்களையுடைய கிளைகளிலிருந்து இலைகளைக் கவளமாகத் தன் கன்றுக்கும் பெண் யானைக்கும் பாதுகாத்து நின்று ஊட்டும் இடம் இது பெருமையான மலையின் பிளப்பிடங்களையுடைய இடம் அறம் செய்யத் தகுந்த கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று அதாவ்து திங்கள் நிறைந்த கார்ந்திகை மீனைச் சேரும் நாளில் ஏற்றி வைக்கப்படும் வரிசையாகச் செல்லும் ஒளியையுடைய நீண்ட விளக்குகளின் ஒழுங்கைப் போலப் பல பூக்கள் உள்ள கோங்க மரங்கள் அழகு செய்யும் உன் தந்தையின் காடு இது இவற்றைக் காணத் தக்க முறையில் காண்பாயாக கண்டு கொண்டே என்னோடு வருவாயாக" என்று உடன்போக்குற்ற தலைவிக்கு வருத்தம் மிகாவகையில் உவப்போடு உைைரத்தான் தலைவன்

249. இவளுடைய அழகு அழியும் அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, ஆளி நன் மான், வேட்டு எழுகோள்உகிர்ப் பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும் துன் அருங் கானம் என்னாய், நீயே குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய, ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு போயின்றுகொல்லோ தானே - படப்பைக் கொடு முள் ஈங்கை நெடுமா அம் தளிர் நீர் மலி கதழ் பெயல் தலைஇய ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!

- இளநாகனார் நற் 205