பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 * அன்பொடு புணாந்த ஐந்திணை - பாலை

தொடர்ந்து விம்மியழும் கண்ணோடு பெரிதும் அழிந்து ஏன் கலங்கித் துன்பப்படுகிறாய்? நம் காதலர் உன்னைப் பிரிந்து செல்ல மாட்டார் சென்றாலும் பிரிவுத் துன்பத்தை அவர் பொறுத்துக் கொள்ள மாட்டார் அவர் நம்மேல் பெரிய விருப்பம் கொண்டவர் சிறந்த அன்பினர், அருளும் செய்ய உரியவர் பிரிந்த நம்மைக் காட்டிலும் இரக்கங் கொண்டு அரிய பொருள் விரைவில் முடியாது ஆயினும் திரும்பி வருவார் அதன்மேலும் இந்தப் பெரிய முகிலின் முழக்கம், இனிய துணையைப் பிரிந்தவரைத் தேடிச் சென்று கொண்டு வந்து தருவது போலும், ஆகவே நீ வருந்தாதே." என்று பொருள் தேடிச் செல்லும் தலைவன் திரும்ப நாள் களாகும் எனத் தலைவி வருந்த அவளை ஆற்றுவித்துரைத் தாள் தோழி

251. இனிது வாழ்க இருவரும் பார்வை வேட்டுவன் படு வலை வெளிஇ, நெடுங் கால் கணந்துள்.அம் புலம்பு கொள் தெள் விளி சுரம் செல் கோடியர் கது மென இசைக்கும் நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண், கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் நெடுங் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின் வந்தனர்; வாழி - தோழி! - கையதை செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன் கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும், அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.

- குடவாயிற் கிரத்தனார் நற் 212 "தோழி, பார்வை ஒன்று வைத்துப் பிடிக்கும் வேட்டுவன் அமைத்த கொடிய வலைக்கு அஞ்சி நெடிய காலையுடைய “கணந்துள்” என்னும் பறவை தனிமையால் இருந்து கத்தும் தெளிந்த ஒசை, சுரத்திற் செல்லும் கூத்தர்கள் கதும் என இசைக்கும் யாழ் ஓசையோடு ஒத்திருக்கும் அந்தப் பாலை நிலத்தில் கூடிய ஒலியையுடைய பம்பை என்னும் இசைக் கருவியையும் சினங்கொண்ட நாயையுமுடைய வடுகர் இருப்பர் அவ்வாறாய நெடிய பெரிய குன்றத்தைக் கடந்து