பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன்'; 15?

வந்தார் நம் கையிலுள்ள செம் பொன்னாற் செய்த வளைகள் கழல்வதை நோக்கி, நம் சிறந்த புதல்வன் நம்மை அணைத்துக் கொண்டு எழுப்பும் அழுகையொடு சேர்ந்த இனிய குரலைக் கேட்குந் தோறும் அவாக் கொள்ளும் மனத்தையுடைய நமக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி நம்மிடத்துக் காதலர் வந்தனர்” என்றாள் பொருள் முயற்சியில் வென்று திரும்பிய தலைவன் வருகையை நண்பர்கள் வழி அறிந்த தோழி

252. கேட்டிருப்பாரோ இடிக்கும் குரலை 'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம’ என, வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை, 'அரும்பு அவிழ் அலளிச் கரும்பு உண் பல் போது அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு என, எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி, மை சூழ் வெற்பின் மலை பல இறந்து, செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் கேளார்கொல்லோ - தோழி - தோள இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி நகுவது போல, மின்னி ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?

- கருவூர் கோசனார் நற் 214 "தோழியே புகழும் இன்பமும் கொடையும் மூன்றும் சோம்பலோடு இருப்பவர்க்கு பொருந்துவதில்லை கிடைத்தல் அரிது எனக் கருதிப் பொருள் தேடும் வினைவயின் பிரிந்த அவர் நம்மில் வேறுபட்ட கொள்கையுடையராய் உள்ளார் அரும்புகள் மலர்ந்த பூக்களின் வண்டுகள் உண்ணும் பல மலர்களை நீலமணி போன்ற கரிய உன் கூந்தலின் அணிய கார் காலத்தில் திரும்பி வருவேன் என்று குறையிலாத உறுதி மொழியை என் மனங் கொள்ளுமாறு கூறிக் சென்றனர் முகில் சூழும் மலைகள் பலவற்றைக் கடத்து தேடும் பொரு ளுக்காகச் சென்ற குற்றமற்ற காதலர், தோளில் விளங்கிய வளைகள் நெகிழும்படி செய்தார் என் கலங்கிய துன்பத்தைக் கண்டு என்னை எள்ளி நகுவது போல மின்னி, இகழ்ந்து