பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露52 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

ஆரவாரம் செய்வது போல முழங்குகின்ற இந்தக் கார் கால மழையின் குரலை அவர் அந்த நாட்டில் கேட்க வில்லையோ?” என்று பொருள் வயிற் பிரிந்த தலைவன் பருவம் வந்தும் திரும்பவில்லையே என வருத்தமுடன் தலைவி கூறினாள்.

253. நான் என்ன சொல்வது அவர்க்கு

அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலைப், பின்பணி அமையம் வரும் என, முன்பனிக் கொழுந்து முந்துlஇக் குரவு அரும்பினவே, ‘புணர்ந்தீர் புணர்மினோ என்ன இண்ர்மிசைச் செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின், 'பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து, இனி எவன் மொழிகோ, யர்னே - கயன் அறக் கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி வில் மூக கவலை விலங்கிய வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற் 224. "தோழி, நம் தலைவர் அன்புடையவர். உறுதியாய் ஆற்றலுள்ள பெரியவர். அதற்கு மேலும் பின்பனிக் காலம் வரும் என்று முன்பனிக் காலத்தில் குரவம் என்னும் மரம் கொழுந்துகளை விட்டு, அதன் பிறகு அரும்புகளைத் தோற்றின. சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் மாவின் பூங்கொத்துள்ள கிளைகளில் எதிர் எதிர் உட்கார்ந்து கொண்டு கணவனோடு சேர்ந்தவர்கள் பிரியாதீர்கள், பிரிந்தால் சேர்ந்து கொள்ளுங்கள் என்று குரல் எழுப்பும். அந்த இன்ப இளவேனில் காலம் வந்தது. அவர் நம்மிடத் தில் பிரியமாட்டேன் என்று உறுதி சொன்னார். ஆனால் குளம் நீரில்லாது அழகழிந்து வறண்ட காலத்தில் பல பெரிய நெடிய நெறிகளையும் போர்த் தொழில் நெருங்கிய கவர்ந்த வழிகள் குறுக்கிட்ட வெம்முனைகளையுமுடைய அருஞ் சுரத்தின் வழியாகப் போக நினைத்தவரைப் பற்றி யான் என்ன சொல்ல வல்லேன்?” என்று தலைவன் பிரிவைத்