பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அதனால் செல்மின் சென்று விளை முடிமின், சென்றாங்கு அவண் நீடாதல் ஒம்புமின், யாமத்து, இழை அணி ஆகம் வடுக கொள முயங்கி, அழையீராகவும் பனிப்போள் தமியே குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென, ஆடிய இள மழைப் பின்றை. வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?

- ஆசிரியர் ? நற் 229

“செல்வோம் செல்வோம் என்று தலைவர் திரும்பத் திரும்பச் சொன்னார் யான் பலவாறு வெறுப்புக் கொண் டேன் செல்வீராக என்று சொல்வதற்கு யான் அஞ்சித் தயங்கினேன் செல்லற்க எனச் சொன்னால் அது பலர் மனத்திலும் எறியப்பட்ட அவலமான புல்லிய சொல்லாகுமே என்று கருதி அதைச் சொல்ல யான் அஞ்சினேன் அதனால் செல்வீராக, சென்று வினை முடிப்பீராக, சென்று அங்கே நீட்டித்தலைத் தவிர்வீராக என்றேன் மேலும் அணிகலன் அணிந்த மார்பு வடுக் கொள்ளுமாறு யாமத்தில் முயங்கி அருகில் நீங்கல் இருக்கும் போதே நடுங்கும் இவள், நீர் இல்லாது தனியே இருந்தால் மிகவும் வருந்துவாள் இவன் வருந்தும் படியாக இடமெல்லாம் பரவி ஒன்று சேர்ந்து குளிரும்படி இயங்கும் இளமுகிலின் பின்னே வாடைக் காற்றும் வந்து நின்றதே கண்டீரோ? என்றேன். எனவே வினைமுடித்து விரைந்து வருக" என்று தலைவியை ஆற்று வித்தாள் தோழி

256. மறந்து விட்டாரோ?

வளை உடைத்தனையது ஆகிப், பலர் தொழச், செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி, இன்னாப் பிறந்தன்று பிறையே, அன்னோ, மறந்தனர் கொல்லோ தாமே - களிறு தன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி, வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து,