பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேத்தன் : 155

அழுங்கல் நெஞ்சமொடு முழுங்கும் அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?

- கடம் பனூர்ச் சாண்டிலியன் நற் 234 "தோழி வளையை உடைத்தாற் போன்றதாகி பிறை யானது கன்னி மகளிர் பலரும் தொழும்படி செவ்விய இடத்தை உடைய வானத்தின்கண் விரைவாக வெளிப்பட்டு மீண்டும் பிறந்தது ஆண் யானை வருந்திய நடையை உடைய மடப்பத்தை உடைய தனது பிடியினது வருத்தத்தைப் பொறாமல் உயர்ந்த நிலையை உடைய யா மரம் அழியும் படி கொம்பால் குத்தி பசையற்ற வெள்ளிய பட்டையைக் கைக் கொண்டு நீரற்ற வெறுங் கையைச் சுவைத்து மேல் நோக்கி தன் பிடியின் வருத்தத்தைப் போக்க இயலாமையை நினைத்து வருந்தும் நெஞ்சோடு பிளிறுகின்ற நீண்ட அரிய வழியினிடத்து நாம் அழும்படி நம்மைப் பிரிந்து சென்ற தலைவன் அந்தோ நம்மை மறந்தனரோ?” என்றாள் தலைவி தோழியிடம்.

257. பிரிவு அருங்காதலர்

நனி மிகப் பசந்து, தோளும் சா அய்ப், பனி மலி கண்ணும் பண்டு போலா, இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண்டு ஊடின்றும் இலையோ? - மடந்தை - உவக்காண் தோன்றுவ, ஓங்கி - வியப்புடை இரவலர் வருஉம் அளவை, அண்டிரன் புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, உலகம் உவப்ப, ஒது அரும் வேறு பல் உருவின், ஏர் தரும் மழையே!

- காரிக் கண்ணனார் நற் 237 "மடந்தாய், உன் தோள்களும் மிகவும் பசந்து மெலிந்தன. கண்ணிர் நிறைந்த கண்களும் முன் போலின்றி வேறுபட்டன. இனிய உயிர்போன்ற பிரிவதற்கரிய காதலர் கைவிட்டு நீட்டித்திருந்தார் அப் புலவியை உள்ளத்திலே கொண்டு நீ ஊடுகின்றாயுமில்லையே ஆய் அண்டிரன்