பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 .ே அன்பொடு புணர்நத ஐந்திணை - பாலை

வியப்புடைய இரவலர் வரும்படி அவர்களுக்குக் கொடை கொடுக்கக் கருதித் தொகுத்து வைத்த யானைக் கட்டம் போல முகில் தோன்றும் முகில் கண்டு உலக உயிர்கள் மகிழ்ச்சியடையும் சொல்லுதற்கரிய வேறு பல் உருவத்தோடு எழும் கொண்டல் ஓங்கித் தோன்றுவனவற்றை உங்கே காண். இது அவர் குறித்த பருவம் அன்றோ!' என்று பருவங் கண்டுரைத்தாள் தோழி

258. பாலையை படைத்தவன் பாழுறுக! ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே - வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள், கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி, ஏங்கு உயிர்ப்பட்ட வீங்குமுலை ஆகம் துயில் இடைப்படுஉம் தன்மைய்து ஆயினும், வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில், கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி, ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல் யானை இன நிரை வெளவும் கானம் திண்ணிய மலை போன்றி.சினே.

- நப்பாலத்தனார் நற் 240

“கூர்மை பொருந்திய வெள்ளையான பற்களையும் ஒளி பொருந்திய நெற்றியையுமுடைய இளமகளே! கை கவர் முயக்கம் மெய்யிலே தெரிய வேண்டாமென்று மாறுபட்டு ஏங்குகின்ற பெரு மூச்சோடு பொருந்திய பருத்த கொங் கையையுடைய என் உடம்பானது இனித் தனிமையில் துயில வேண்டிய நிலைமையை உடையதாயிற்று ஆயினும் வெயி லால் வெப்பமுற்ற பருக்கைக் கற்கள் மிக்க பள்ள்த்தின் ஒரு புறத்தில் ஆன் கூட்டத்தை மேய்க்கும் ஆயர் குந்தாலியால் தோண்டித் குழிசெய்த கிணற்றை அடைந்து சிறு குழி நீரை யானையின் கூட்டம் குடிக்கும் பாலை நிலம் திண்ணிய மலை போன்றதாய் உள்ளது இந்த உலகைப் படைத்தவன் இக் கொடிய பாலை நிலத்தில் சென்று விரைவாக வருத்துக” என்று தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தாள்