பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 157

259. எண்ணுவது இல்லையோ என்னை? உள்ளார்கொல்லோ - தோழி - கொடுஞ் சிறைப் புள் அடி பொறித்த வரியுடைத் தலைய நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற, வளரா வாடை உளர்பு நனி தீண்டலின், வேழ வெண் பூ விரிவன பலவுடன், வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய, மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய, எல்லை போகிய் பொழுதின் எல் உறப், பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப், பல் இதழ் உண்கண் கலுழ, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே? _ - மதுரைப் பெருமருதனார் நற் 241 "தோழி, வளைந்த சிறகுகளையுடைய பறவைகளின் உள்ளங்காலின் சுவடு பொறித்துள்ள வரிகளை மேற்கொண் டுள்ள, நீரில்லாத பள்ளங்களில் நுண்மணல் தோன்றவும், வளராத வாடைக் காற்று வீசி மிகவும் தீண்டுதலால் கரும்பின் வெள்ளை நிறமான பூக்கள் பலவும் விரிவன, வேந்தனுக்கு வீசும் கவரிபோலப் பிற பூக்களையுடைய புதர்கள் தோறும் அழகு செய்யவும், மழைபெய்து கழிந்த விசும்பில் மாறி மாறி ஞாயிறு விழிந்து இமைப்பது போல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையவும் பகல்சென்ற மாலைப் பொழுதில் இர்வு வரவும் ஒழுக விடவும், நிலையாக இராத பொருளின் மேல் பற்றுக் கொண்டு நம்மைப் பிரிந்து சென்றவர் நம்மை தலைவன் நினைக்க மாட்டாரோ” என்று வருத்தமுடன் வினவிய தலைவியைத் தோழி பொறுத்திருக்க வேண்டினாள்

260. அறத்தினும் பொருள் சிறந்ததோ? தேம் படு சிலம்பில் தெள் அறல் தழிஇய துறுகல் அயலது மணல் அடைகரை, அலங்கு சினை பொதுளிய நறுவடி மாஅத்துப் பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங்குயில்,