பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

தலைவி,“ஒளியால் அழகுடைய அருவிகளையுடையதாய், உடன் போக்கில் எங்களைத் தொடர்ந்து வந்த நம் உறவினர் அறியாதபடி வலிமை மிக்க என் தலைவனை மறைத்து உதவிய குன்றம், எங்கும் வற்கடம் உண்டாயினும், நீர் வற்கடம் ஏற் படாமல் அறம் நிறைந்து மிக ஓங்குக” என்று கூறினாள்.

13. செவிலி ஆற்றாமை

தெறுவது அம்ம, நும் மகள் விருப்பே - உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்ப், பாழ்படு நெஞ்சும் படர் அடக் கலங்க, நாடு இடை விலங்கிய வைப்பின் காடு இறந்தனள், நம் காதலோளே! - ஐங் 313 நற்றாய் தோழியை நோக்கி, "மிக்க துயரம் காரணமாகத் தோன்றும் அவலத்தால் உயிர் நீங்குமாறு மெலிந்து பாழ் படும் என் நெஞ்சம், தன்னை நினைப்பதால் வருத்தம் மிகுந்து கலக்கத்தை அடைய, நாடுகள் பல இடையிட்ட இடத்தை யுடைய காடுகளைக் கடந்து என் மகள் அன் பனுடன் போனாள். ஆதலால் அவள்மீது உண்டான என் காதல் துன்பப் படுத்தலாயிற்று” என்றாள்.

14. அரிய காட்டினால் அவலம் கொள்கிறேன்

'அவிர்தொடி கொட்ப, கழுது புகவு அயரக், கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவச், சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும் நீள் இடை அருஞ் சுரம் என்ப - நம் தோள்.இடை முனிநர் சென்ற ஆறே. - ஜங் 314 தலைவி தோழியை நோக்கி, “தோழியே, விளங்கும் தொடியை அணிந்த பேய்மகள் ஆறலைக்கப்பட்ட இடத்தில் செத்தவரின் கரிய தலையைத் தேடித் திரிய, அவள் ஏறி யூர்ந்து வந்த கழுது என்ற பேய், அவர்தம் நிணமாகிய உணவு தேடி உண்ண, எஞ்சியவற்றை உண்ணும் கரிய கண் களையுடைய காக்கையும் கழுகும் வானத்தில் ஆரவாரம் இட்டுத் திரிய, சிறு கண்களையுடைய யானை, எதிர்ப்பட்ட