பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 159

இன் இசை வானம் இரங்கும்; அவர்,

'வருதும் என்ற பருவமோ இதுவே?

- காப்பியஞ் சேந்தனார் நற் 246 "தோழி, பார்க்குமிடம் எங்கும் இனியன தோன்றும் நெடிய சுவரிலுள்ள பல்லியும் நம் பக்கத்திலிருந்து ஒலி செய்து தெளிவிக்கும் மனையிலுள்ள பெரிய நொச்சி வேலிக்கு மேலே உயர்ந்த மா மரத்தின் கிளையிலிருந்து கூவும் தொழிலில் மாட்சிமைப்பட்ட கரிய குயில் பலகாலும் கூவும். காட்டில் பொன் போன்ற அரும்பையுடைய கொன்றையும் பிடவும் மலர் முறுக்கு அவிழ்ந்தன. இனிய ஓசையுடைய முகில் முழங்கும் அவர் வருவேன் என்ற பருவம் இதுவே ஆதலின் திட்பமான உள்ளத்தோடு அரிய வழிகள் பல கடந்து தேடும் பொருட்குப் பிரிந்து சென்றனராயின் பொய் கூறமாட்டார் இப்போது வருவர் நீ வாழ்க!” என்றாள்

தோழி

262. தலைவன் பிரிவை ஆற்றிக் கொள்க!

'உலவை ஒமை ஒல்கு நிலை ஒடுங்கிச், சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம், திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது, அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என, வலியா நெஞ்சம் வலிப்பச், சூழ்ந்த வினை இடை விலங்கல போலும் - புனை சுவர்ப் பாவை அன்ன பழி தீர் காட்சி, ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் நல் நாப் புரையும் சீறடிப், பொம்மல் ஒதிப், புனை இழை குணனே.

- அம்மெய்யன் நாகனார் நற் 252 "சேய்மை நாட்டு அரிய நெறியில் ஒமை மரத்தின் காய்ந்த கிளைகள் தளர்ந்த நிலையடைந்து அடங்கிய போது சிள் வண்டு ஒலிக்கும் அவ் வழியில் திறமை வலிமையோடு கூடிய