பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

கொள்கையோடு சென்று செயற்பட்டால் அல்லது அருமை யாகச் சேரும் பொருள் என்பது சான்றோர் கொள்கை அழகு செய்த சுவரிலிருக்கும் பாவை போன்ற குற்றம் தீர்ந்த காட்சியுடைய வியப்படையத் தகுந்த ஒப்புடைய அகன்ற அல்குல் உடைய கருமை மிகுந்து மலர்ப்பினை போன்ற சிறந்த இமைகளைக் கொண்ட குளிர்ந்த கண்கள் உடைய முயல் வேட்டைக்கு எழுந்த மிக விரைவுடைய சினங் கொண்ட நாயின் நல்ல நாவைப் போன்ற சிறந்த அடி களுடையவள் பொலிவு பெற்ற கூந்தல் உடைய அணியத் தகுந்த அணிகலன்கள் உடையோள் இத் தலைவியின் குணங்கள், தகுந்த சான்றோர் தலைவன் செயலை இடையில் விலக்கவில்லை போலும் விலக்கவில்லையானால் ஆற்றி யிருக்க வேண்டியது தான்” என்று பொருள் வயிற் பிரியும் எனக் கவன்ற தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறினாள்

263. பிரிய போவதில்லை உன்னை!

நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி, அல்குல் பெரு நலத்து, அமர்ந்த கண்ணை; காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த புலம்புவீற்றிருந்து நலம் சிதைந்தனவே; இந் நிலை தவிர்ந்தனம் செலவே வைந் துதிக் களவுடன் கமழப் பிடவுத் தளை அவிழக், கார் பெயல் செய்த காமர் காலை, மடப் பிணை தழிஇய மா எருத்து இரலை காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த கண் கவர் வளி நிழல் வதியும் தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே,

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற் 256 "நீயோ, புலவர்களால் டாடப் பெற்ற, குற்றம் நீங்கிய, சிறிய அடிகளைக் கொண்டு உள்ளாய் அல்குலோ பெரு நலம் உடையது; பெரிய அழகு அமைந்த பொருத்தமான கண்களையும் கொண்டு உள்ளாய் காடோ, அழகும் நிழலும்