பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேத்தன் ; 161

இழந்ததாய், அழல் உண்ட மரங்களையுடையதாய், ஆள்கள் செல்லும் வழிகளை இல்லாததாய், எல்லா நலமும் சிதைந்த தாய் உள்ளது இந் நிலையில் பொருள் கருதிப் பிரிந்து செல்லும் செலவை யான் தவிர்த்தேன் இன்னுங் கேள் கூர்மையான முனையையுட்ைய களாவின் பூ மலர்ந்து கமழ்ந்து பிடவின் பூ தளையவிழ்ந்து முகில் மழைபொழிந்த அழகிய கார்காலம் இது. கரிய பிடரியையுடைய ஆண் மான்கள் இளைய பெண் மான்களைத் தழுவிக் கொண்டு வயிரம் கொண்ட வேல மரத்தின் தாழ்ந்த கிளைகள் தந்த கண் கவரும் வரி நிழலில் தங்கியிருக்கும் அப்படிப்பட்ட குளிர்ந்த கானகத்தின் வழியே யான் செல்வதையும் நிறுத்தி விட்டேன் இனி நீ வருந்தாதே’ என்றான் தலைவன்

264. கொடியது வறுமை

தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர், ஆடு மயிற் பீலியின், வாடையொடு துயல்வர, உறை மயக்கற்ற ஊர் துஞ்சு யாமத்து, நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்த், துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் பணைத் தோள், அரும்பிய கணங்கின், கணைக் கால், குவளை நாறும் கூந்தல், தேமொழி இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்பப், 'பிரிவல் நெஞ்சு, என்னும் ஆயின், அரிது மன்றம்ம, இன்மையது இளிவே.

- பெருந்தலைச் சாத்தனார் நற் 262 “குளிர்ந்த புனத்திலுள்ள கருவிளவின் கண் போன்ற, சிறந்த மலர் ஆடும் மயிற்பீலி போல வாடைக் காற்றால் ஆடும் மழைத்துளி நிரம்பப் பெய்த ஊர் உறங்கும் யாமத்தில் நடுக்கும் நொய் வருத்த, நல்ல அழகு அழிந்து துன்பமிக்க மனத்தோடு இருப்பள் வெறுக்கும் துன்பம் கலக்கும் பருத்த தோளையும், அரும்பிய தேமலையும் திரண்ட தண்டுள்ள குவளை மலர் மணம் வீசும் கூந்தலையும், இனிய சொல்லை யும் உடைய இவளிடமிருந்து பிரிந்து பொருள் தேடும் முயற்சி வலிமையுடையதால் என் நெஞ்சு யான் இவளைப்