பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

பிரிவேன் என்று கூறுமானால் வறுமையது இழிவுதான்,

அம்ம, உறுதியாக மிகக் கொடியதேயாம்” என்று தலைவன்

தலைவி ஆற்றாக் குறிப்பறிந்து தன் நெஞ்சுடன் பேசினான்

265, விரைந்து செல்க ஊர் வந்தது!

பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு, வான் தளி பொழிந்த காண்பு இன் காலை, அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின் வீ பெய் கூந்தல் வீசு வளி உளர ஏகுதி - மடந்தை' - எல்லின்று பொழுதே; வேய் பயில் இறும்பின் கோவலர் யாத்த ஆபூண் தெண் மணி இயம்பும், ஈகாண் தோன்றும், எமம் சிறு நல் ஊரே.

- ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் நற். 264 “மடந்தையே, மூங்கில் நிரம்பிய சிறுகாட்டில் கோவலர் ஆவினத்தின் கழுத்தில் கட்டிய தெளிந்த ஒசையுடைய மணி ஒலிக்கும் எமது சிறிய நல்ல ஊர் இதோ பார், தோன்று கிறது பாம்பு தன் புற்றிலே அடங்கிக் கிடக்கும்படி முழக்க மிட்டு வலப் பக்கத்தில் உயர்ந்து, முகில் மழைத்துளிகளைப் பொழிந்த காட்சிக்கு இனிய காலை நேரம் இது அழகு விளங்கும் தோகைகளை வியப்படையும்படி விரிந்து ஆடும், நீலமணி போன்ற கழுத்தையுடைய, மயில் இது. மயில் தோகை போன்ற உன் மலர் சூடிய கூந்தல் வீசும் காற்றால் விரிந்து விளங்கும்படி வெயில் இல்லாத இப்போதே சிறிது விரை வாகச் செல்லுவாயாக’ என்று தன்னுர் அண்மையில் வந்து விட்டதை அறிந்த தலைவன் தேர்ப்பாகனை ஊக்கினான்.

266. யார் அறிவார் அவர் உள்ளத்தை? குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப் பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூண் புதல்வன், மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய, அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச் செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி