பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் ; 163

திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும், பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார், சிறு பல் குன்றம் இறப்போர்; அறிவார் யார் அவர் முன்னி அவ்வே?

- எயினந்தை மகன் இளங்கீரனார் நற் 269 “பெரும, குரும்பை போன்ற மணியையுடைய அரையிற் கட்டும் பூண் பெரிய செவ்விய கிண்கிணி, பால் அருந்தும் பவள வாய், இவற்றோடு பசிய பூண்களையும் அணிந்த புதல்வன் மாலை அணிந்த தன் இனிய மார்பில் ஊர்ந்து விளையாடி இறங்குதலால் மகிழ்வாள் தலைவி அதனால் அழகிய பற்களில் படர்ந்த சிறந்த புன்முறுவல் கொள்வாள் குற்றமற்ற கற்பொழுக்கத்தை உடையவள் நம் உயிர்போன்ற விருப்ப மிக்கவள் அத்தகைய காதலியின் திருமுகத்தில் உலாவும் கண்கள் வருந்தி நாள்தோறும் பெரிய மரத்தைச் சுற்றியுள்ள வள்ளிக்கொடி பொல் சுற்றிப் பிணிக்கும் சிறிய பல குன்றங்களைக் கடந்து செல்லத் துணிந்தார் அவர், யாது தான் செய்யமாட்டார்? அவர் கருதியவை யாவையோ? யார் அறிவார்” என்று பொருள் வயிற் பிரியும் தலைவனின் தூது வருடன் பேசி போதலைக் கைவிடுமாறு கூறினாள் தோழி

267. தாழியில் தருக என்னை

இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழியச், செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச் சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று, வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த குவளை உண்கண் என் மகள் ஒரன்ன, செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம், மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு; மா இருந் தாழி கவிப்ப, தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.

- ஆசிரியர் ? நற் 271