பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

‘அண்மையில் ஈன்ற கரிய எருமையின் பெரிய செவியை யுடைய கன்று பசிய பூந்தாது உதிர்ந்து எருவாகக் கிடப்ப தில் தங்கித் துயில் மேற்கொண்டு உறங்கும் அவ்வாறாய செழுமையான குளிர்ந்த மனையில் எம்மை இங்கே ஒழியும் படி செய்து விட்டுச் சென்றாள் என் மகள் தன்னோடு செல்லும் பெரிய காளை போன்ற தலைவன் கூறும் பொய்ம் மொழியிலே மயங்கினாள் சேய்நாட்டுச் சுவையான காய் களையுடைய நெல்லி மரச்சோலை வழியே போகும்போது இடையிலே திரண்டு வீழ்ந்த காயை ஒரு சேரத் தின்று பூக்களுள்ள சுனையின் மிகச் சிலவாய நீரைக் குடித்துச் சேர்வாள். குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணளாய என் மகள் சென்று விட்டாள் ஒரு தன்மையாகிய சிவந்த பனங் குருத்தைக் கண்டு பதனிடுமாறு போடுதலாய மாலைப் பொழுதில் விரிந்த நிலவிலே சென்று பின்னே போய்க் காண்டற்கு விட்ட கூற்றுவன் இதற்கு முன்னரே என்னைப் பெரிய கரிய தாழியிலிட்டுக் களிக்கும்படி செய்திருக்க வேண்டும் என் உயிரைக் கொள்ளாத கூற்றுவன் வலியழிந்து இறந்தொழிவானாக." என்று தன் மகள் காதலனுடன் சென்றதை ஏற்றாளாயினும் ஊர்ப் பழிப்புக்கு கவன்று இவ்வாறுரைத்தாள்

268. கொடியதன்று அவர் செல்லும் பாதை நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇப், படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து, உழை படு மான் பிணை தீண்டலின் இழை மகள் பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம் குமிழ் தலை மயங்கிய குறும் பல் அத்தம், ‘எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி' எனக் கூறின்றும் உடையரோ மற்றே - வேறுபட்டு இரும் புலி வழங்கும் சோலைப், பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே?

- காவன் முல்லைப் பூதனார் நற் 274 “பெரிய மலைப் பகுதியிலுள்ள சோலையில் பெரிய புலி சினங்கொண்டு திரியும் அப் பாலை நிலத்தைக் கடந்து