பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : $67.

போலப், பசித்த பிடியானது உதைத்த ஒமை மரத்தின் சிவந்த அடிப்பாகம் செங்கதிர் வெயில் காயும் போது விளங்கித் தெரியும், அக் காட்டு வழியில் சென்ற என் மகள் அடிகள் எப்படி வருந்தினவோ,” என்று வருத்தமுடன் கூறினாள் மகட் போக்கிய தாய்

271. அன்பற்றவர்!

மாசு இல் மரத்த பலி உண் காக்கை வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் அடங்காச் சொன்றி அம் பல் யாணர் விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், தாம் நம் உழையாராகவும், நாம் நம் பனிக் கடுமையின்,நனி பெரிது அழுங்கித், துஞ்சாம் ஆகலும் அறிவோர் அன்பிலர் - தோழி! நம் காதலோரே.

- கழாக்கீரன் எயிற்றியார் நற் 281

“பலிச்சோறு உண்ணும் காக்கை, வெற்றியடையும் போரைச் செய்யும் சோழரது கழார் என்னும் ஊரில் மாசற்ற மரத்திலுள்ள காற்று மோதும் நெடிய கிளையில் அமர்ந்து மழைத் துளியோடு அசைந்து கொண்டிருக்கும் கொள்ளத் தகுந்த நல்ல வகையான மிகுந்த பலிக் கொண்டயோடு போடப் படும் அடங்காத சோற்றுத் திரள்களோடு அழகிய புது வருவாய் போன்ற இறைச்சியுடைய பெருஞ்சோற்றுத் திரள்களையும் நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும். மழை பொழிந்த மயக்கமான இருளையுடைய நடு நாளில் நம் காதலர் நம் பக்கத்தில் இருக்கவும் நாம் கடுங் குளிரால் மிகப் பெரிதும் துன்புற்றுத் துரங்காமல் இருக்கிறோம் இதைத் தலைவர் அறிவர் எனவே இதற்குத் தக்கப்படி தலைவர் நடக்காததால் அன்பில்லாதவர் ஆகிறார்” என்றாள் தலைவி