பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 15

மறவரைக் கொன்று திரியும் நீண்ட இடத்தையுடைய கடப்பதற்கு அரிய காடு என்று கூறுவர் நம் தோளிடத்து விருப்பம் இல்லாதவர் சென்ற நெறியை. அதைக் கேட்டு என் மனம் கவலை கொள் கின்றது” என்று கூறினாள்.

15. நெடுங்கண் அழுகை அறியார்!

பாயல் கொண்ட பனி மலர் நெடுங் கண்

பூசல் கேளார் சேயர் என்ப

இழை நெகிழ் செல்லல் உlஇ,

கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே. - ஜங் 315

தோழி, "தன்னால் துறக்கப்பட்டார்க்குத் தன் பிரிவால் அணிகள் நெகிழ்ந்து ஒடவல்ல துன்பத்தை அடையச் செய்து மூங்கில்கள் பொருந்தியுள்ள சோலைகளையுடைய காடு களைக் கடந்து, மிக்க தொலைவில் சென்றுள்ளவரான காதலர் பிரிந்த பொழுது அயர்ந்து உறக்கம் கொண்டமை பொருட்டுக் குளிர்ந்த மலர் போல் நீண்ட நின் கண்களால் விளையும் துன்பத்தைக் கேளார். கேட்பார் எனக் கலங்குத லால் என்ன பயன்?” சொல்லாமல் பிரிந்த தலைவன் வேறு பாட்டைக் கூறினாள். +

16. ஆற்றுவது எப்படி?

பொன் செய் பாண்டிற் பொலங்கலம் நந்தத்,

தேர் அகல் அல்குல் அவ் வளி வாட,

இறந்தோர் மன்ற தாமே - பிறங்கு மலைப்

புல் அரை ஒமை நீடிய

புலி வழங்கு அதர காணத்தானே. - ஐங் 316

தோழி, "உயர்ந்த மலைப் பக்கத்தில் புல்லென்ற அடிப் பகுதியை உடைய ஓமை மரங்கள் நிறைந்த புலிகள் திரியும் காடு அதில் பொன்னால் செய்யப்பட்ட பாண்டில் என்ற பொன்னணி நெகிழ, தேரின் தட்டைப் போன்ற அகன்ற அல் குலில் கிடந்த அழகிய வரிகள் வாட, நம்மைப் பிரிந்து சென்றார் ஆகலான் நாம் ஆற்றுவது யாங்ங்னம்? அறியேன்” என்று தலைவன் பிரிவின் கண் உரைத்தாள்.