பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

272. அலையும் நிலையோ என் உடல்?

புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண், உள்ளம் பிணிக்கொண்டோள் வயின் நெஞ்சம், 'செல்லல் தீர்கம் செல்வாம்' என்னும்: செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என, உறுதி தூக்காத் தூங்கி, அறிவே, 'சிறிது நனி விரையல் என்னும், ஆயிடை, ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங் கயிறு போல, வீவதுகொல் என் வருந்திய உடம்பே?

- தேய்புரி பழங்கயிற்றினார் நற் 284

“முதுகுப்புறம் தாழ்ந்த கரிய கூந்தல், மலர் நிறம்பெறும் குளிர்ந்த இதழ்களையுடைய அழகிய கண்கள், இவற்றை யுடைய தலைவி தன் அன்பால் என் உள்ளத்தைக் கவர்ந்தாள் அவள் சார்பாக என் நெஞ்சம் பேசுகிறது அவளுடைய துன்பத்தைத் தீர்ப்பதற்கு அவளிடம் மீள்வோம் என்று சொல்கிறது. ஆனால் என் அறிவு செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடிக்காமல் இடையில் விட்டுத் துன்பம் செய்தல் அறியாமையோடு இளிவையும் விரைவில் தரும் என்று உறுதியாக ஆய்ந்து காட்டி சிறிது விரைவாகப் போகாதே என்று சொல்லுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் உன் உடம்பு வருந்துகிறது. ஒளிபொருந்திய கொம்பு களையுடைய ஆண் யானைகள் இரண்டு ஒன்றோடொன்று மாறாகப் பற்றி இழுக்கும் போது தேய்ந்த புரிகளையுடைய பழங்கயிறு புரி இற்று அறுந்து போவது போல என் வருந்திய உடம்பு அழிந்து போக வேண்டியது தானா?” என்று பொருள் முடியா நின்ற தலைவன் ஆற்றானாகி வினவினான்

273. தோள்களுக்கு அணிகலன்கள்!

ஊசல் ஒண் குழை உடை வாய்த்ததன்ன, அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி