பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 169

கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் சென்றோர்மன்ற செலீஇயர் என் உயிர் எனப், புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து இணைதல் ஆன்றிசின் - ஆயிழை - நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய நின் தோள் அணிபெற வரற்கும் அன்றோ - தோழி, அவர் சென்ற திறமே?

- துறைக்குறுமாலிற் பாலங்கொறறனாா நற் 286 “ஆய்ந்த அணிகலனை அணிந்த தோழி, உடைமரம் மிக்க வழியில் மகளிரின் ஒள்ளிய காதணி கொளுவிய ஊசல் போன்ற மலை நெறியிலுள்ள குமிழ மரத்தின் அழகிய இதழையுடைய மலர்கள் மலைப் பாறையில் கோலம் செய்யும் அப் பொலிவழிந்த குன்றத்தின் வழியில் என் காதலர் சென்றார் இனி என் உயிர் சென்று ஒழிவதாக என்று நீ சொல்லி, உன் அணிகலன்கள் நழுவ விம்மி அழுது, மிக நொந்து, வருந்துகின்றாய் சிறிது அமைவாயாக சிந்திக்கும் போது, நட்புக் கொண்டவர்கள் செல்வம் பெற வேண்டியும் ஒட்டிக் கொண்டவர்களில் ஒருவரான உன் தோள்கள் நல்ல கலன்களை அணியப்பெற வேண்டியும் அன்றோ அவர் சென்ற திறமாகும்” என்றாள் தோழி தலைவியிடம்

274. அவன் தாயும் அவலம் கொள்வாளாக! மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடிப், பலிக் கள் ஆர்கைப் பார் முது குயவன் இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து, விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், பெரு விதுப்புறுக மாதோ- எம் இற் பொம்மல் ஒதியைத் தன் மொழிக் கொளீஇக், கொண்டு உடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாயே. - கயானார் நற் 293 "அழகிய பூங் கொத்தையுடைய நொச்சி மாலை சூடி, பலியிடும் கையையுடைய பரிய முது குயவன் இடும் பலியை உண்ணக் காக்கைகளை அழைக்கின்ற அகன்ற இடத்தை