பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ? 171

276. பொருள் தான் அருமையோ? வம்ப மாக்கள் வரு திறம் நோக்கிச், செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் கரும்புடைப் பனைத் தோள் நோக்கியும், ஒரு திறம் பற்றாய் - வாழி எம் நெஞ்சே! நல் தார்ப் பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண், ஒருமை செப்பிய அருமை, வான் முகை இரும் போது கமழும் கூந்தல், பெரு மலை தழிஇயும் நோக்கு இயையுமோமற்றே?

- விற்றுற்று வண்ணக்கன் தத்தினார் நற் 298

நெஞ்சே! வாழி, வழிப்பறி செய்யும் மறவர் புதிய மக்கள் வழியில் நடந்துவரும் திறத்தை எதிர்பார்த்து நிற்பர். சிவந்த அம்புகளைத் தொடுப்பர். சினப்பார்வையுடைய அவர் மடிந்த வாயினால் எழுப்பும் ஒசை கேட்ட பருந்தின் சேவல் அச்ச முள்ள தன் இனத்திடம் போய்ச் சேரும். அவ்வாறாய அரிய சுரத்தின் கவர்ந்த வழிகளில் அச்சந் தரும் பரந்த இடத்தை யுடைய பெரிய பல குன்றங்களைக் கடந்து பொருள் தேட வேண்டும் என்று நினைத்தும், இவளது கரும் பெழுதிய பருத்த தோள்களைப் பார்த்தும் ஒரு பக்கமும் பற்ற மாட்டாது உள்ளாய். நல்ல மாலை அணிந்த பொன்னாற் செய்யப்பட்ட தேரையுடைய செழியனது கூடலில் ஒப்பற்ற தனிமையாகப் பொருள்தேடி வரத் தோழி சொல்லிய அருமையான மொழியினைக் கேட்டோம் யாம் பெரிய மலை நெறியேச் சேர்ந்த பின்பு வெள்ளையான அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணம் வீசும் கூந்தலையுடையாளை நோக்குதற்கு இயையுமோ? இயையாதன்றே" என்று பொருள் வயிற் பிரிபவனைத் தடுத்து நிறுத்தினாள் தோழி