பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዝገ2 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

277. அறியவில்லையோ அவர்?

இழை அணி மகளிரின் விழை தகப் பூத்த நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் காடு கவின் பூத்தஆயினும், நன்றும் வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் நறை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ தா அம்தேரலர்கொல்லோ - சேய் நாட்டுக், களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு வெளிறு இல் காழ வேலம் நீடிய பழங்கண் முது நெறி மறைக்கும், வழங்கு அருங் கானம் இறந்திசினோரே?

- மதுரை மருதன் இயநாகனார் நற் 302 "நெடுந் தொலைவிலுள்ள நாட்டில் களிறு உதைத்துப் போட்ட கவிழ்ந்து கிடக்கும் மிகுதியான புழுதி வெள்ளை அல்லாத வயிரமுள்ள வேலமரம் வளர்ந்த துன்பமுள்ள பழைய வழிய மறைத்துவிடும் செல்ல முடியாத அவ் வழி யில் அரிய கானம் கடந்து சென்றனர் தலைவர் அணி கலன்களை அணிந்த பெண்கள் போல விரும்பும் படியாகப் பூத்த நீண்ட சுரிந்த பூங்கொத்திலுள்ள விளங்கும் மலரை யுடைய கொன்றைக் காடு அழகுறப் பூத்துள்ளது. அது கண்டு அவர் கார் காலத்தை அறியவில்லை போலும், ஆயினும் பெரிதும் வரு மழைக்கு எதிர்நோக்கி மலர்ந்த நீலமணியின் நிறம் போன்ற பெரிய புதர்களின் நறும்புகை நிறம் சேர்ந்த நல்ல பூங் கொத்தையுடைய எறுழ மரத்தின் மலர்கள் பரந்து கிடக்கும் இவற்றை நோக்கியும் அவர் கூதிர் காலத்தை அறியவில்லை போலும், அறிந்தால் திரும்பி விடுவார் என்று தலைவி பருவம் கண்டு உரைத்தாள்.

278. துன்புறுத்துவானோ அவனை? வரி அணி பந்தும், வாடிய வயலையும், மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்றத், தமியே கண்ட தண்டலையும் தெறுவர,