பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு எம் பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

- எயினந்தைமகன் இளங்கீரனார் நற், 308

“என் பொருட் பயணத்திற்கு யான் விரைவுபடுத்திய ஆரவாரத்தை ஆய்ந்த கலன் அணிந்த தலைவி அறிந்தனள் குவளைமலர் போன்ற அவள் மையுண்ட கண்களில் நீர் வடியக் கலங்கியிருந்தாள் யான் அவளை அருகில் வரும்படி அழைத்தேன் நாணி வந்தாள் என் பிரிவை அவள் விரும்ப வில்லை எனவே மெல்ல மெல்ல வந்தாள் என் பயணம் பற்றிக் கேட்கவும் முடியாமல் அதைத் தடுக்கவும் முடியாமல் இருந்தாள் மணம் கமழ்கின்ற செறிந்த தன் தன்லமுடி விளங்க இருந்தாள் நல்ல வேலைப்பாடமைந்த இயங்கும் பாவை இயந்திரம் அற்று அழிந்தது போலக் கலங்கினாள் மிகவும் நினைத்துருகினாள் என் மார்பில் சாய்ந்து அடைந் தாள் அதுகண்டு, ஈர மண்ணால் செய்த, நீர் ஊற்றி வைக்கும் பசுமையான மண்கலம் பெருமழை பெய்த நீரை ஏற்றுக் கரைந்து அழிவதுபோலப் பொருள் வேட்கையுடைய என் நெஞ்சம் கரைந்து மாறி அவளுடன் ஒன்றுபட்டு மகிழ்ந்தது.”

280. என்ன பாடுபடுவாளோ அவள்?

நோகோ யானே, நோம் என் நெஞ்சே - 'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருடச், சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, மாரி நின்ற மையல் அற்சிரம் யாம் தன் உழையம் ஆகவும், தானே, எதிர்த்த தித்தி முற்றா முலையள், கோடைத் திங்களும் பனிப்போள் - வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்? எனவே.

- கழார்க் கீரன் எயிற்றியார் நற் 312 “பொருள் விரும்பி என்னை நொந்து கொள்ளும் என் நெஞ்சமே, படரும் தேமலையும் முற்றாத கொங்கையையும் உடைய என் காதலி, யான் அவள் அருகில் பிரியாதிருந்த