பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 177

283. செல்வதை நிறுத்துக!

கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை இரை தேர் வேட்கையின் இரவில் போகி, நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், ஊக்கு அருங் கவ்லை நீந்தி மற்று இவள் பூப்போல் உண்கண் புது நலம் சிதைய, வீங்கு நீர் வாரக் கண்டும், தகுமோ? - பெருமl - தவிர்க நும் செலவே.

- மதுரைக் காருலவியங் கூத்தனார் நற் 325 “பெரும், கவிந்த தலையையும் பருத்த மயிரையும் உடைய ஆண் கரடி இரை தேடும் வேட்கையாலே இரவில் போனது கரையான் கூட்டம் நீண்ட உழைப்பினால் கட்டி யெடுத்த பாம்பு வாழும் புற்றை அடைந்தது புற்றிலுள்ள எல்லாக் கரையானும் ஒழியும்படி விரைவாக ஒடித்து வாயை யுடைய பெரிய நகங்களாலே பிளந்து எடுத்தது அவ்வாறான, மனத்தால் நினைத்தற்கரிய கோணல் வழிகளைக் கடந்து நீ செல்ல வேண்டும். இவளது பூப்போன்ற மையுண்ட கண்களின் புத்தழகு சிதையவும் மிக்க கண்ணிர் ஒழுகவும் அவற்றைக் கண்டும் நீ செல்லுதல் தகுமோ, உன் செலவு தவிர்க” என்றாள் தோழி தலைவனிடம்

284. காலம் தாழ்த்தாது வருவார் வரையா நயவினர் நிரையம் பேனார், கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பினன் இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது, புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும், அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து அல்கலர் வாழி - தோழி, - உதுக் காண்: