பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

17. நெஞ்சம் நீடிய பொருள்! சூழ்கம் வம்மோ - தோழி பாழ்பட்டுப் பைது அற வெந்த பாலை வெங் காட்டு அருஞ் சுரம் இறந்தோர் தேனத்துச் சென்ற நெஞ்சம் நீடிய பொருளே. - ஜங் 317 தலைவி, “தோழியே, பாழ்மை அடைந்து பசுமை இல்லாது வெந்து கரிந்து பாழாகிய கொடிய காட்டில் உள்ள அரிய சுரத்தைக் கடந்து சென்ற தலைவரிடம், தூதாகச் சென்ற என் நெஞ்சம் விரைந்து திரும்பி வரவில்லை. காலம் நீள்கின்றது. இதன் பொருள் தெரிந்திலது ஆகலின் அதை ஆராய்வோம் வருவாய்!” என்று தோழியிடம் உரைத்தாள்.

18. விருப்பை அழித்தார்:

ஆய்நலம் பசப்ப, அரும் படர் நலிய, வேய் மருள் பணைத்தோள் வில் இழை நெகிழ, நசை நனி கொன்றோர் மன்ற - விசை நிமிர்ந்து ஓடு எரி நடந்த வைப்பின், கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. - ஐங் 318

தலைவி, ‘ஓசை மிக்குப் பலவிடத்தும் பரவிப் போகும் தீ எரிந்த இடத்தை உடைய முடிகளால் உயர்ந்து செறிந்த மலையைக் கடந்து சென்ற தலைவர், அழகிய என் நலம் கெட்டுப் பசலை பாயவும் அவர்மேல் உள்ள நினைவு வருத்து கிறது. ஆதலால் மூங்கில் போல் பருத்த தோளிடத்து அணிந்த ஒளி வீசும் மணிகள் கழன்று நீங்கவும் பிரிந்து, தன் உள்ளத்தில் எழும் விருப்பத்தைப் பெரிதும் அழித்து விட்டார்” என்று தலைவன் பிரிந்த போது சொன்னாள்.

19. அவர் நம்மை மறந்தார் கண் பொர விளங்கிய கதிர் தெறு.வைப்பின், மண் புரை பெருகிய மரம் முளி கானம்

இறந்தனரோ நம் காதலர்? மறந்தனரோதில் மறவா நம்மே. - ஜங் 319