பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

இரு விசும்பு அதிர மின்னிக், கருவி மா மழை கடல் முகந்தனவே!

- மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் நற் 329 "தோழி, நம் காதலர் அளவில்லாத நயமுடையவர் அளறு போன்ற தீய நெறிகளை விரும்பாதவர் வன்கண் மறவர், கொன்று வழியிலே போட்ட மக்களின் அடுபிணம் முடை நாற்றம் எழுப்பும் அதன் பக்கத்தில், புள்ளிகளை யுடைய முது பருந்து ஈன்றணிமையாய் இருந்தும் சென்று தின்ன இயலாமல் வெறுத்துக் கடந்து, தன் சிறகுகளை அடித்துப் பறந்து போகும் அப்போது அது உதிர்த்த பறக்கும் புல்லிய இறகுகளை வன்கண் மறவர் எடுத்துத் தம் சிவந்த அம்பிலே கட்டுவர் தாம் வெற்றிகொள்ளும் நெஞ்சத்தோடு வழி பார்த்துத் தங்குவர் அம் மலை வழியிலே நம் காதலர் சென்றனராயினும் நம்மைக் கைவிட்டு அங்குத் தங்கார் பெரிய விசும்பு அதிரும்படி மின்னி இடி முதலான தொகுதி யோடு கூடிய கரிய முகில் மழை பெய்வதற்காகக் கடல் நீரை முகந்து வந்தது காண்க” என்றாள் தலைவியிடம் அவள் தோழி, பருவம் காட்டி

285. பல்லி சொன்ன பலன்! மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென, கழை கவின்அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின், பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து, திருந்திழைப் பனைத் தோள் பெறுநர் போலும், நீங்குகமாதோ நின் அவலம் - ஒங்குமிசை, உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி நயவரு குரல பல்லி, நள்ளென யாமத்து, உள்ளுதொறும் படுமே.

- கள்ளிக்குடிப் பூதம்புல்னார் நற் 333