பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 179

"ஓங்கிய இடத்திலுள்ள உயர்ந்த புகழையுடைய நல்ல இல்லத்தில் விளக்கமான சுவரில் பொருந்தியிருந்து நன்மை வருவதாகக் கூறும் குரலையுடைய பல்லி, இருள் செறிந்த யாமத்தும் யாம் நம் காதலரை நினைக்ககுந் தோறும் ஒலிக்கும் முகில் மழைபொழிந்து உலர்ந்து பெரிய விசும்பை அடைந்தது மூங்கிலின் அழகு அழிந்த மலை வழியின் சிறு பாதையில் பருக்கைக் கற்களுள்ள பள்ளத்தில் ஊறிய சிறிய நீருள்ள பக்கத்தில் அழகிய நுதலையுடைய யானையொடு புலி போரிட்டு நீர் உண்ணும் அவ்வாறாய சுரத்தைக் கடந்து செல்லுதல் அரிய என்னாது, வலிமை அழிந்தாலும் உள்ளே கிளர்ச்சி கொண்ட நெஞ்சத்தோடு செல்வர் வள்ளன்மை செய்ய விரும்பி அரும் பொருட்கு அகன்றார் காதலர் அவர் உன் முயக்கத்தை விரும்பித் திருந்திய கலன் அணிந்த உன் பருத்த தோள்களைப் பெறுவர் போலும் இனி உன் அவலம் நீங்குக” என்றாள் தலைவியிடம் தோழி

286. மறந்து விட்டாரோ சிறந்த நெறியை?

உலகம் படைத்த காலை - தலைவ மறந்தனர் கொல்லே சிறந்திசினோரே - முதிரா வேனில் எதிரிய அதிரல், பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர், நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன், அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால் தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும் அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது, பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற் 337 "தலைவனே, தலைவியின் கூந்தல் அழகிய நல்ல நிறம் பொருந்திய நீலமணி போன்றது ஐந்து பகுதியாக முடித்தற் குரியது நீண்டு தொங்கி மணக்கும் தன்மையுடையது இள வேனிலை எதிர்பார்த்து மலரும் காட்டு மல்லிகை மலர், பருத்த அடி மரத்தோடு குறுகிய நுண்ணிய மயிரையுடைய சிறந்க படக்களைக் கொண்ட பாதிரி மலர், நறுமணமுள்ள