பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

“மாமை நிறத்தை உடையவளே, கைவேலைத் திறமை அமைந்த பாவை ஒன்று நடந்து வந்ததுபோல் உன் தந்தையின் இல்லத்தின் எல்லையைக் கடந்து என்னோடு வந்துவிட்டாய் வருந்தாதே முதல்நாள் தோன்றிய குளிர்ந்த நிலையையுடைய முகில்கள் இந்த அழகு மிக்க காட்டின் அகன்ற இடங்களில் பரவின விரைந்து செல்லும் தம்பலப்பூச்சிகளைக் கண்டதும் பிடித்தும் நீ சிறிது விளையாடுக யானும் இளைய களிற்றி யானைகள் தம் உடலைத் தேய்த்துக் கொண்ட பருத்த அடி மரத்தையுடைய இவ் வேங்கையின் பெரிய பின் புறத்தில் மணல் பரந்த பக்கத்தில் தங்கியிருக்கிறேன் இங்கே தங்கி யிருக்கும் போது வழிப்பறி செய்வோர் முதலானோர் போர் செய்ய வந்தால் அஞ்சாமல் அவர்களோடு போர் செய்து அவர்கள் புறமுதுகு காட்டி ஒடும்படி செய்வேன் உன் சுற்றத்தார் உன்னைத் தேடி வந்தால் யர்ன் மறைந்து கொள்வேன் ஏனென்றால் யான் உன் சுற்றத்தாரோடு போர் செய்தால் எவர் தோற்றாலும் நீ வருந்துவாய். எனவேதான் நான் மறைந்து கொள்வேன்”என உடன்போக்கில் உவந்து வந்த தலைவிக்குத் தலைவன் அன்புரை கூறினான்

292. மனைவியைப் பிரிபவர் மடமை! அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள் மணி ஏர் ஐம்பால் மாக அறக் கழிஇக், கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி மாதர் வண்டொடு கரும்பு பட முடித்த இரும் பல் மெல் அண்ை ஒழியக் கரும்பின் வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில் அம் கழைத் தூங்க, ஒற்றும் வட புல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி, இவ் உலகத்தானே!

- மதுரைஈழத்துப் பூதன் தேவனார் நற் 366