பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 185

“நெஞ்சே, அரவு படமெடுத்தாற் போன்றதும் பலவாகக் கலந்த மணிகள் பதித்த நுண்ணிய துகிலின் ஊடு வந்து இமைக்கும் திருந்திய இழை அண்ந்ததும் ஆகிய அல்குலை யும் பெரிய தோளையுமுடையவள் இளமடந்தை அவள் நீலமணி போன்ற கூந்தலை மாசு அறக் கழுவிக் கூதிர் காலத்தில் மலரும் முல்லையில் குறும் காம்பு நீக்கிய மலர் களை முடித்தவள் அழகிய பெண் வண்டோடு ஆண் வண்டும் மொய்க்க முடித்த மிகப் பலவான மெல்லிய கூந்தலையுடையவள் அக் கூந்தல் அணையிலே கிடந்து துயில்வதை விட்டொழிப்பது அறியாமை கரும்பின் வேல் போன்ற வெண்முகை விரியும்படி தீண்டுவது வாடை அறிவு மிக்க தூக்கணம் குருவி முயன்று செய்த கூட்டினை மூங்கி லின் அழகிய கழை அன்சயத் தாக்குவது வட புலவாடை அவ் வாடைக் காலத்தில் பிரிவோர் இவ் உலகத்து மிக அறியாமை யுடையவராவார்” என்று பொருள் திரட்டப் புறப்பட்ட தலைவன் தன் நெஞ்சிற்குள் சொன்னான்

293. அன்னம் என நடந்தாள் பைம் புறப் புறவின் செங் காற் சேவல் களரி ஓங்கிய கவை முடக் கள்ளி முளரி அம் குட்ம்பை ஈன்று, இளைப்பட்ட உயவு நடைப் பேடை உணரீஇய, மன்னர் முனை கவர் முது பாழ் உகு நெற் பெறுஉம் அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப் பரந்தன நடக்க, யாம் க்ண்டனம்மாதோ, - காண் இனி வாழி என் நெஞ்சே! நாண் விட்டு அருந் துயர் உழந்த காலை மருந்து எனப்படுஉம் மடவோளையே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற். 384 “என் நெஞ்சேமே, களர்நிலத்தில் உயர்ந்தோங்கிய சுவை யுள்ள முட்களையுடைய கள்ளியின் உச்சியிலே கள்ளிகளால் ஆக்கிய அழகிய கூட்டில் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துக் காவல் செய்து கொண்டிருக்கும் வருந்திய நடையுடைய பெண்