பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

புறா, உண்ணுதற்குப் பசிய முதுகையும் சிவந்த கால்களையும் உடைய ஆண் புறா இரை தேடி, மன்னர்கள் போர் செய்த போர்க்களத்தில் சென்று முதிர்ந்த பாழ் நிலத்திலே சிதறி உதிர்ந்து கிடக்கும் நெல்லைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுக்கும் அப்படியான பாதுகாப்பில்லாத தூர நாட்டுப் பாதையில் நல்ல நாட் காலையில் மலர்ந்த வேங்கையின் பொன் போன்ற புது மலர்கள் உதிர்ந்து பறந்து கிடக்கும் அந்த மலரின் மேல் அன்னம் நடப்பது போலத் தலைவி நடந்து வருவதை நான் கண்டது போல நீயும் காண்க நாணத்தை விட்டு அருந் துன்பத்தை அடைந்து யான் வருந்தியபோது, மருந்து கிடைத்தது எனப்படுவது போல மடவோள் நம்மொடு நடந்து வருவதைக் காண்டாயாக" என்று தன் நெஞ்சிடம் கூறினான் தலைவன்

294. அழித்துக் கொள்ளாதே அழகை

நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும், அம்ம! நாளும் தொல் நலம் சிதைய, ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர் வில்லிடை விலங்கிய துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் வருவர் வாழி - தோழி, - செரு இறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல் கெழு தானைச் செழியன் பாசறை உறை சுழி வாளின் மின்னி, உதுக்காண், நெடும்பெருங் குன்றம்.முற்றிக் கடும் பெயல் பொழியும் கலிகெழு வானே.

- பொதும்பில கிழார் நற் 387 "தோழி, வாழி போரில் வென்று தலையானங்கானத்து யாவரும் அஞ்சும்படி சென்று தங்கிய வேற்படை பொருந்திய சேனைகளையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பாசறையிலே உறையிலிருந்து வெளியே உறுவிய வாளைப் போல மின்னி, நெடிய பெரிய மலையைச் சூழ்ந்து முழக்க மிட்டுக் கொண்டல் விரைந்து மழையைப் பொழியும் உன் நெறிந்த கரிய கூந்தலும் நீண்ட தோளும் கெடவும் இயற்கை